தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

நீதியான தேர்தல் தொடர்பில் ஆசிய கண்காணிப்பாளர்கள் சந்தேகம்

துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் அமைதியை நிலைநாட்ட வேண்டும்!- பொலிஸ் தலைமையகம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 01:27.08 AM GMT ]
துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென பொலிஸ் தலைமையகம் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வன்முறைகள் இடம்பெற்றால்,  வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியேனும் அமைதியை பேண பொலிஸ் நிலையங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்முறைகளைத் தடுத்து நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் தனிப்பட்ட ஒர் நபர் அல்லது குழுவொன்று செயற்பட்டால் அவர்களின் தராதரத்தை கருத்திற் கொள்ளாது, நாட்டின் ஒழுங்கினை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.
அரசியல் ரீதியான பழிவாங்கல்களில் வாக்காளர்கள் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 80,000 பொலிஸ் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkr1.html
வெளிநாட்டு சக்திகளினால் ஆட்டுவிக்க முடியாத ஜனாதிபதி மஹிந்தவை வெற்றியீட்டச் செய்வோம்!- ரட்னசிறி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 01:44.05 AM GMT ]
வெளிநாட்டு சக்திகளினால் ஆட்டுவிக்க முடியாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டச் செய்வோம் என சிரேஸ்ட அமைச்சர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். 
சில நாடுகள் தங்களுக்கு தேவையான வகையில் இலங்கையை ஆட்டுவிக்க சிலரை ஜனாதிபதியாக்க முயற்சிக்கின்றன.
அண்மைக்காலமாக கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.  கிராம மக்கள் நன்றி மறந்து ஒரு போதும் செயற்பட மாட்டார்கள்.
எதிர்வரும் 8ம் திகதி நாட்டு மக்கள் மதிநுட்பமான தீர்மானம் எடுப்பார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது.
எல்லோரிடமும் குறைகள் உண்டு, குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழையவர்களுக்கு இடமில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது. பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டங்கள் வெற்றி கொள்ளப்பட்டுள்ளன.
சந்திரிக்கா, மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி நான் பேச விரும்பவில்லை.
அவ்வாறு பேசுவதன் மூலம் அவர்களுக்கு தேவையற்ற பிரபல்யம் கிடைக்கப்பெறும் என ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இன்று இணைந்து கொள்ள உள்ளதாக எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டவர்களில் ரட்னசிறி விக்ரமநாயக்க மற்றும் அவரது மகன் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkr3.html
நீதியான தேர்தல் தொடர்பில் ஆசிய கண்காணிப்பாளர்கள் சந்தேகம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 02:08.14 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள், நீதியான தேர்தல் ஒன்று தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே தமக்கு அரச ஊடகங்களின் பிழையான செயற்பாடுகள், தனியார் ஊடகங்களை கட்டுப்படுத்தல், பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய 55 உறுப்பினர்களை கொண்ட அமைப்பின் தலைவர் எஸ் வை கியூரைசி இன்று முதல் தமது கண்காணிப்பாளர்கள் 22 மாவட்டங்களில் பரந்தநிலையில் பணியாற்றுவர் என்று குறிப்பிட்டார்.
தம்மால் வன்முறைகள் குறித்து அறிக்கையிடமுடியும். எனினும் அவற்றை கட்டுப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் தேர்தல்கள் ஆணையாளராக செயற்பட்ட கியூரைசி, இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த தேர்தலை நியாயமானதாக நடத்த முடியும் என்ற நம்பிக்கையை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.
பொலிஸாரும் நீதியான தேர்தல் தொடர்பில் தமக்கு உறுதியளித்துள்ளதாக கியூரைசி தெரிவித்தார்.
இந்த உறுதிமொழிகளில் நம்பிக்கையை வெளியிட்ட கியூரைசி, வடக்கில் மக்களின் வாக்களிப்பை தடுக்க படையினர் தமது செல்வாக்கை பயன்படுத்தப்படலாம் என்பதை சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkr4.html

Geen opmerkingen:

Een reactie posten