தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

மைத்திரிபாலவிற்கு ஆதரவளித்து ஒருவர் தீக்குளித்தார்?

தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை!- ஜனாதிபதியின் சோதிடர் சுமணதாஸ
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 02:10.19 AM GMT ]
தாம் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை ஜனாதிபதியின் சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன மறுத்துள்ளார்
தாம்: நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற பின்னர் வீட்டிலேயே இருப்பதாகவும் நலமுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகங்களே பிழையான செய்திகளை பரப்பியுள்ளன.
ஊடகங்கள்  மீது தாம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் சுமணதாஸ கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkr5.html

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 03:51.52 AM GMT ]
நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளருக்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்குவதாக அறிவித்தததை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கிரான் பிரதேசத்திலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
நேற்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர், திருக்கோவில், பொத்துவில், கல்முனை ஆகிய பிரதேசங்களில் பரப்புரைகளை மேற்கொண்டார்.
இதில் திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக்கட்சியின் திருக்கோவில் பிரதேச முக்கியஸ்தர்களும் பொது மக்களும் இணைந்து கொண்டனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகனேரி, தட்டுமுனை, அழகாபுரி, ஊரியன்கட்டு, வாகரை ஆகிய கிராம பகுதிகளுக்கு வீடுவீடாக சென்று யோகேஸ்வரன் எம்.பியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbksy.html

ஒன்பதாம் திகதிக்கு பின்னர் மலையகத்தில் தனி வீட்டுத்திட்டத்தை அமைப்போம்: பி.திகாம்பரம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 03:54.04 AM GMT ]
ஒன்பதாம் திகதிக்கு பின்னர் மலையக மக்களுக்கு தனி வீடு திட்டத்தை ஆரம்பிப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நேற்று தலவாக்கலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கம், இதனால் இந்த தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் உரிமைகளுகக்காக போராடுபவர்கள்.
வீ.கே.வெள்ளையன் அவர்கள், சீ.வீ.வேலுப்பிள்ளைகள் போன்றவர்கள் மலையக மக்களின் உரிமைகளுக்காக வந்தவர்கள் அந்தவழியிலேயே நானும் இந்த தொழிற்சங்கத்திலேயே தலைமை தாங்கி மலையக மக்களுக்காக என்றும் குரல் கொடுப்பேன்.
இதனாலேயே எனது அமைச்சு பதவியை தூக்கி எரிந்து விட்டு மலையக மக்களுக்காக 7 பேர்ச் காணியுடன் கூடிய தனி வீடு அமைத்து கொடுக்க வந்தேன். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன, முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
நான் மட்டுமில்லை, மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகிய நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து இந்த கோரிக்கைகளை முன்வைத்து இன்று உங்கள் முன் வாக்குகளை கேட்டுள்ளோம்.
2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தனி மனிதராக நின்று எனது ஆதரவை வழங்கினேன். அப்பொழுது சில தலைவர்கள் ஜக்கிய தேசிய கட்சியுடன் இருந்தார்கள். அன்று நான் பயப்படவில்லை. இன்றும் நான் பயப்படவில்லை. மலையக மக்களாகிய உங்களுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வந்துள்ளேன்.
ஆகவே 9ம் திகதி காலையில் நாங்கள் தனி வீடு திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என இதன்போது அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbksz.html
மைத்திரிபாலவிற்கு ஆதரவளித்து ஒருவர் தீக்குளித்தார்?
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 05:04.02 AM GMT ]
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து நபர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.
கொழும்பு விஹார மஹாதேவி பூங்கா பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 68 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு தீக்குளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பன்னிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தீக்குளித்துள்ளார். மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு தீக்குளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை கண்டி மய்யாவ பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சமையல் எரிவாயு கசிந்ததில் இந்த தீ ஏற்பட்டுள்ளதுடன் வீடு முற்றாக தீயில் அழிந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks0.html

Geen opmerkingen:

Een reactie posten