தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

மஹிந்த ராஜபக்சவும் மிஸ்டர் பிரபாகரன் என்று விளித்தார்!- ஐக்கிய தேசியக் கட்சி !

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மிஸ்டர் பிரபாகரன் என்று விளித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. 
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரசாரத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, மிஸ்டர் பிரபாகரன் என்று விளித்தமையை ஆளும் கட்சி தமது பிரசாரத்துக்கு பயன்படுத்தி வந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இதனை தமது விமர்சனத்துக்கு உட்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்;திப்பின் போது மிஸ்டர் பிரபாரகரன் என்று கூறுவதில் எவ்வித தவறும் இல்லை என்று தெரிவித்தார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராஜதந்திரிகள் சமூகத்தின் முன்னால் பேசும் போது மிஸ்டர் பிரபாகரன் என்று விளித்தார் என்று மங்கள குறிப்பிட்டுள்ளார்.
தமது பேச்சுவார்த்தைக்கான முயற்சி குறித்து மிஸ்டர் பிரபாகரனின் கருத்தை தாம் வரவேற்பதாக ஜனாதிபதி அப்போது தெரிவித்ததாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmtyBTZKbkq7.html

Geen opmerkingen:

Een reactie posten