மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தவேளை, பாதுகாப்பு துறை அமைச்சு அவர் கைகளில் தான் இருந்தது. அதன் கீழ் நேரடியாக இயங்கிவந்த கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்தில் நடக்கும் கூத்தைப் பாருங்கள். சோதனை நடக்கும் வேளையில், சப்பாத்திற்குள்(சூ) கசை வைத்து கொடுக்கிறார்கள். பாஸ்போட்டுக்கு கீழ் காசை வைத்து கொடுக்கிறார்கள். பின்னர் சில பாதுகாப்பு அதிகாரிகள் எந்த ஒரு பயமும் இல்லாமல், நேரடியாகவே காசைப் பெறுகிறார்கள். இவை தமிழ் பெண்களை மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் நபர்களை குறிவைத்தே நடக்கிறது.
வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு(மத்திய கிழக்கு நாடுகளில்) வேலைசெய்துவிட்டு நாடு திரும்பும் பெண்களிடம் இந்த அதிகாரிகள், பெரும் பணத்தை கறக்கிறார்கள். இவை டினாரில் அல்லது டாலரில் இருக்கிறது. பணத்தை கொடுத்தால் மாத்திரமே அவர்கள் கொண்டு வரும் பொருட்களை அனுமதிக்கிறார்கள். இல்லையென்றால் வேண்டும் என்றே இழுத்தடித்து அலைய விடுவார்கள். மேலும் வீட்டு பாவனைக்காக அவர்கள் கொண்டு வரும் பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது என்றும் கூறிவிடுவார்கள். இப்படியாக கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. CCTV கமரா இருக்கிறது என்று தெரிந்தும் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள், என்றால் யார் இந்த துணிச்சலைக் கொடுத்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா ? தற்போது ஆட்சி மாறிவிட்டது. ஆனால் பழைய CCTV டேப்பை அழிக்க சிலர் மறந்து விட்டார்கள். இதனால் இந்தக் கொள்ளை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten