தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

கல்முனை மாநகரசபையை நான்கு பிரிவுகளாக பிரிக்கும் வர்த்தமானி அறிவித்தல்!: தேர்தல் ஆணையாளர் தடை!

அரசாங்கத்தின் முக்கியமானவர்கள் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருகின்றனர்!- ஜேவிபி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:46.51 AM GMT ]
ஜனாதிபதிக்கு உதவ வந்த அரசாங்கத்தில் உள்ளவர் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. 
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட காலம் இலங்கையில் தங்கியிருக்க உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எனவேதான் அவர் காலத்துக்கு காலம் அவர்கள் தமது அமெரிக்கா வீசாக்களை புதுப்பித்து வருவதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச, டளஸ் அழகப்பெரும, சந்திம ராசபுத்ர, கோத்தபாய ராஜபக்ச போன்றோர் இலங்கையில் அதிக காலம் தங்கியிருக்கும் உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
அமெரிக்காவில் சொத்துக்களை கொண்டுள்ள இவர்கள் 9 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினர் என்றும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.
http://www.newstamilwin.com/show-RUmtyBTZKbkry.html
நாட்டை விட்டு ஓடப் போவதில்லை! மைத்திரி இரவு உணவின்பின் சொல்லாமலேயே சென்றார்!- ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 01:22.36 AM GMT ]
ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னரும் தாம் இலங்கையிலேயே தங்கியிருக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலநறுவையில் நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விமான நிலையங்களை மூடப் போவதாக எதிரணி தெரிவித்துள்ளமை குறித்து கருத்துரைத்த அவர், விடுதலைப் புலிகளுக்கு பயந்து ஓடாதவர் என்ற வகையில் இலங்கையில் இருந்து ஒடப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
எதிரணி தாமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறப் போவதாக கூறுகிறது.
எனினும் தாம் வெற்றி பெற்று எதிரணியின் தேர்தல் அறிக்கையை குப்பையில் எறியப் போவதாக ஜனாதிபதி கூறினார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தம்மிடம் கூறிவிட்டே சென்றார்.
எனினும் மைத்திரிபால தம்முடன் இருந்து ஒன்றாக உணவு அருந்திவிட்டு சொல்லாமலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmtyBTZKbkr0.html#sthash.Q9iJj8vf.dpuf
கல்முனை மாநகரசபையை நான்கு பிரிவுகளாக பிரிக்கும் வர்த்தமானி அறிவித்தல்!: தேர்தல் ஆணையாளர் தடை
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 05:26.47 AM GMT ]
கல்முனை மாநகர சபையை நான்கு பிரிவுகளாக பிரிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான கல்முனை மாநகரம், அக்கட்சியின் முயற்சி காரணமாக பிரதேச சபை அந்தஸ்திலிருந்து படிப்படியாக தரமுயர்த்தப்பட்டு, தற்போது மாநகர சபையாக செயற்படுகின்றது.
இதன் அதிகாரம் 1990களில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வசமே இருந்து வருகின்றது.
இந்நிலையில் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலகியவுடன் கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரித்து துண்டாடும் திட்டமொன்றை உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் அதாவுல்லா மேற்கொண்டிருந்தார்.
இதன் மூலம் கல்முனை மாநகரசபையின் அபிவிருத்தித் திட்டங்களில் சரிவர உள்வாங்கப்படாத சாய்ந்தமருது, மருதமுனை போன்ற பிரதேசங்களை தனியான பிரதேச சபைகளாக பிரகடனம் செய்வதன் மூலம் அப்பகுதி மக்களின் வாக்குகளை தன் கட்சியினூடாக ஜனாதிபதிக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று அதாவுல்லா எதிர்பார்த்திருந்தார்.
இந்நிலையில் கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்கும் திட்டத்தை கடுமையாக எதிர்த்த தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் செனட் சபை உறுப்பினர் கலாநிதி எஸ்.எல். றியாஸ் இது குறித்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் பிரிவிற்கும், ஜனாதிபதி செயலகத்திற்கும் முறைப்பாடு ஒன்றை அனுப்பியிருந்தார்.
குறித்த தகவல் கிடைத்தவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு ஒன்று அனுப்பப்பட்டது.
இது குறித்து உடனடிக் கவனம் செலுத்திய தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளுராட்சி மன்றங்களாக பிரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளிவரத் தயாராக இருந்த நிலையில் அதற்குத் தடை விதித்துள்ளார்.
இது அமைச்சர் அதாவுல்லா எதிர் கொண்ட அரசியல் தோல்வி என்று வர்ணிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் கல்முனை மாநகர சபை தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் துண்டாடப்படக் கூடாது என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmtyBTZKbks2.html#sthash.Q43xXu98.dpuf

Geen opmerkingen:

Een reactie posten