தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

ஐ.நாவிற்கு நானல்ல மகிந்த: ரணில்

அடுத்த நாடாளுமன்றத்தில் தமிழரக்கு ஆப்பு…..

2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ்.மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இருந்து 9 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எனினும், 2014ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், யாழ். மாவட்டத்துக்கு 7 நாடாளுமன்ற ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், வடக்கு மாகாணத்தில் இருந்து கடந்த நாடாளுமன்றத்துக்கு 15 உறுப்பினர்கள் தெரிவான போதும், இம்முறை 13 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும் ஆபத்து எழுந்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/95325.html

கருணா – பிள்ளையானுடன் மட்டு அரச அதிபர் பாரிய கொள்ளையில்….

கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பின்தங்கிய ஏழை மக்களுக்காக வந்த பணத்தினை அரசாங்க அதிபர் தன்னிச்சையாக முடிவெடுத்து முன்னைய அரசாங்கத்தில் முக்கிய இடம் வகித்த பிள்ளையான், கருணா, ஹிஸ்புல்லா ஆகியோருடன் சேர்ந்து இப்பணத்தில் பொருட்களை வாங்கி தேர்தல் பிரச்சாரத்திற்காக அப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த தறுவாயில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தின் காரணமாக நாடுபூராகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தலைதூக்கியுள்ள நிலையில் அதில் இருந்து தப்புவதற்காக தன்னாலான பல பிரயத்தனங்களை செய்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயர் அதிகாரிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.
வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்டவர்களை சென்றடைந்துள்ளதாக காட்டுவதற்கு ஆவணம் தயாரித்து வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.
இதன் போது அனைத்து பிரதேச செயலாளர்களும் வழங்கப்படாத பொருட்களுக்கு பொய்யான ஆதாரம் வழங்க முடியாத என மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கேள்விப்பத்திரம் கோராமல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் பொருட்டகள் பாதிக்கப்பட்ட மக்கள் எவவரையும் சென்றடையவில்லை எனவும் இவ்வாரான வேலைகளில் இதற்கு துனையாக அரச அதிபருடன் திட்டமிடல் பணிப்பாளர் ஒருவரும் சேர்ந்துள்ளதாகவும் மீண்டும் மகிந்ததான் ஜனாதிபதியாக வருவார் என்று நம்பியே இவ்வாரான வேலைகளில் அரச அதிபர் இறங்கியதாக அவரது அலுவலக அதிகாரிகள் மூலம் ஊர்ஜிதப்படுத்த முடிகின்றது.
http://www.jvpnews.com/srilanka/95318.html

ஐ.நாவிற்கு நானல்ல மகிந்த: ரணில்

தெனியாயவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “13வது திருத்தச்சட்ட வரையறைக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எல்லா அரசியல் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
நாம் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகிறோம். இதன்படி எல்லா மாகாணசபைகளுக்கும் சமமான அதிகாரங்கள் கிடைக்கும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு ஒன்றை எட்ட விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து வைத்த போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறி விட்டார்.
சிறிலங்கா தொடர்பான ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணைக்குக் காரணம் மகிந்த ராஜபக்ச தான். அவர் இந்த விவகாரத்தை தவறாக கையாண்டதன் விளைவு தான் இந்த விசாரணை. போர் முடிவுக்கு வந்தவுடன், விசாரணை ஒன்றை நடத்துவதாக அவரது அரசாங்கம் ஐ.நா பொதுச்செயலருக்கு இணக்கம் தெரிவித்திருந்தது.
பின்னர், அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும்,உறுதிப்படுத்தியிருந்தது. ஆனால் விசாரணை நடத்தப்படவில்லை. எனவே தான் விசாரணைக் குழுவை ஐ.நா நியமித்தது. எல்லாக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையே விசாரிக்கும் என்பதே புதிய அரசாங்கத்தின் கொள்கையாகும். குற்ற விசாரணைகள் அனைத்துக்கும் சிறிலங்காவின் நீதிமன்றங்களிலேயே தீர்ப்பு அளிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/95327.html

Geen opmerkingen:

Een reactie posten