ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை ஜனவரி 15 அமுலுக்கு வருகிறது!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த தடை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்;கையின் மீன்பிடித்துறையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதற்கு அமைய 12 ரஷ்ய நிறுவனங்கள் இலங்கை மீன்களை கொள்வனவுசெய்ய இணங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். சர்வதேச கடற்பரப்பின் சட்டங்களை இலங்கை மீறியதாக குற்றம் சுமத்தியே ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடை ஏற்பாட்டை மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
http://www.jvpnews.com/srilanka/92794.html
சிறிசேன ஆதரிப்பதால் முரண்பாடுகள்! தீர்வு எட்டப்பட்டுள்ளது: மாவை
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வவுனியாவில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருப்பதை ஜனநாயக ரீதியில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அனைத்து கருத்து முரண்பாடுகள் தொடர்பில் கட்சி கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது எனவும் இந்த கூட்டம் நிறைவு பெற்றதன் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
எதிரணி வேட்பாளர் சிறிசேன அவர்களுக்கு வாக்களிப்பதற்கான நேரத்தில் வேறு எந்தவொரு குழப்பங்களுக்கும் இடமளியாமல், அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்கின்ற கடமைகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் என்ற முடிவு இன்றைய கூட்டத்தில் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மகிந்த துரத்திய கனகரத்தினத்தை முல்லையில் மக்கள் மிதித்த அவலம்…
கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலர் அவரை பேசவிடாது மேடையிலிருந்து இழுத்து வீழ்த்தியுள்ளனர். இதனையடுத்து கனகரத்தினம் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆரம்ப காலப் போராளி செல்லக்கிளியின் சகோதரரென முகவுரை வழங்கப்பட்டதாகவும் அப்போதே தியாகத்தை தந்த குடும்பத்திலிருந்தே துரோகம் செய்வதாக கூறியே தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்த முன்னாள் போராளிகள் மற்றும் முன்னாள் போராளிகள், மீளக்குடியமர்ந்த மக்கள், தொண்டர் ஆசிரியர்களென பலரும் படையினரால் பலாத்காரமாக இப்பிரச்சார கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையினிலேயே கனகரத்தினம் முல்லைதீவு மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92800.html
Geen opmerkingen:
Een reactie posten