கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய பகுதிகள் நிலைகொண்டு இருந்த நூற்றுக்கும் அதிகமான பலதரப்பட்ட கவச வாகனங்கள், வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் மெதுவாக மற்றும் ஓசைபடாது தென்னிலங்கைக்கு நகர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை மகிந்தர் தோற்றுப்போனால், தனது பதவிக் காலம் முடிவடைய இன்னும் 2 வருடங்கள் இருக்கிறது எனவே அதுவரை நான் தான் ஆட்சி புரிவேன் என்று கூறினால் கூட ஆச்சரியப்பட முடியாது என்கிறார்கள். இதனால் பாரிய எதிர்ப்பு கிளம்பும். அதனை சமாளிக்கவே ராணுவத்தை பயன்படுத்த மகிந்த திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது.
வட பகுதியில் இருந்து பாரிய கவச வாகங்கள், தென்னிலங்கை நோக்கி நகர்த்தப்படுவதை பலர் பாத்தும் உள்ளார்கள். பெரும்பாலும் இரவுவேளைகளில் தான் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சிங்கள மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியிலும் ஒரு அச்சம் தோன்றியுள்ளது. கொழும்பில் உள்ள தமிழர்களையும் அவர்கள் உடமைகளையும் 83 கவலவரம் போல தாக்கி அழிக்கவும் சிங்கள காடையர்கள் திட்டம் தீட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மகிந்த தோல்விக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் காரணம் என்ற நிலை தோன்றும் பட்சத்தில் அவர்களை தாக்க சிங்கள காடையர்கள் பலர் தயாரக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு நடந்தால் கூட இது ஒரு தேர்தல் வன்முறை என்று கூறி மூடி மறைத்து விடலாம் அல்லவா.
இது ஒரு இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று கூறுவதை விட, தேர்தல் வன்முறை என்று கூறி அதனை அப்படியே மூடி மறைத்துவிடுவார்கள். தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ளது. 8ம் திகதி நள்ளிரவு(லண்டன் நேரப்படி) அதிர்வு இணையத்தில் இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது உடனுக்கு -உடன் அப்-டேட் செய்யப்படும். எனவே அதிர்வு இணைய செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://www.athirvu.com/newsdetail/1783.html
Geen opmerkingen:
Een reactie posten