ஜெனிவாவில் சரியான இடத்தில் கே.பியாம் சுசில்……
கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த இதுகுறித்து தெரிவிக்கையில்,
“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கும், ஜெனிவாவிலும், ஏனைய இடங்களிலும் சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக பரப்புரைகளுக்கு எதிராக போராடவும், சரியான நேரத்தில சரியான இடத்தில் கொண்டு போய் நிறுத்துவதற்காகவே கே.பியை அரசாங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.
ஆனால், எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களைப் பரப்பி மக்களைக் குழப்ப முனைகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92803.html
கிளிநொச்சியில் பதட்டம்…! சிறுவர்கள் மீது இராணுவத்தினா் தாக்குதல்!
இதனிடையே தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
முன்னதாக அப்பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார்.இதில் சிவராசா(வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு படைமுகாம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.அதனையடுத்து அவாகள் மீது படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆறு வயதேயான பிறின்ஸி என்றழைக்கப்படும் சதீஸ்குமார் சதுஸிகா(வயது 6) படுகாயமடைந்து வைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆர்ப்பாட்டம் செய்திருந்த தாயரொருவருடன் வந்திருந்த குழந்தையினை சிப்பாய் ஒருவர் காலால் மிதித்ததாலேயே அக்குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இதனிடையே இத்தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருந்த போதும் அவர்களை வைத்தியசாலைக்கு செல்ல படையினர். அனுமதிக்கவில்லையெனவும் தொடர்ந்தும் பதற்றம் நீடிப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/92806.html
ஆமிக்கு மாமா வேலை பார்க்க புலிகளை விற்கும் தவச்செல்வன்….
குறிப்பாக இறுதி யுத்தத்தினில் இருந்து வந்திருந்த சிலரை அதற்கு பயன்படுத்தி அம்முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது.அவ்வகையில் யாழில் சுமார் 15 வருடங்களிற்கு முன்னதாக இயங்கி வந்து செயலிழந்த ஊடக அமைப்பொன்றை பெருமளவு பணத்தினை அள்ளி வீசி செயற்படுத்த ஏற்பாடாகியுள்ளது.
வழமையாக தனது துண்டுபிரசுரங்கள் தோறும் தமிழை கொலை செய்யும் படைத்தரப்பு இம்முறை ஜேனலிஸ்ட் எனும் ஆங்கிலத்தை கொலை செய்து அவ்வமைப்பினை தொடங்கியுள்ளது. நேரடியாக படைப்புலனாய்வாளர்களை உள்ளடக்கி அண்மையினில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அங்குரார்ப்பண நிலையினில் தமிழ் மக்களை தேர்தலை பகிஸ்கரிக்க வைக்க தூண்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே வன்னி மீள்புனரமைப்பெனும் நிறுவனத்தை இராணுவ அதிகாரிகள் மூலம் திறந்து வைத்த நபரொருவரே தற்போது இவ்வமைப்பினை செயற்படுத்த பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகின்றது.
அவரது தேர்தல் புறக்கணிப்பு செய்தி இராணுவ நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளுர் இணையமொன்றிலேயே யாழ் மாவட்ட ஊடகவியலாளா் சங்கத் தலைவா் தவச்செல்வன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92809.html
Geen opmerkingen:
Een reactie posten