[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 01:38.18 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரம் முற்றாக செயலிழந்துள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு, நாட்டின் சட்டம், கட்டளைச் சட்டங்களுக்கு முரணாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது. அத்துடன் இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதும் சட்டவிரோதமானது.
அதேபோல் தேர்தலில் ராஜபக்ஷ தனது கட்அவுட், தானசாலை, பொருள் விநியோகம் போன்றவற்றை பார்த்தால் எந்தளவுக்கு தேர்தலில் பணத்தை வாரி இறைக்கின்றனர் என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற அரசாங்கத்தின் கூட்டத்திற்காக அதிகளவான அரச பஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக இரண்டரை கோடி ரூபா செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது பதில் வழங்கப்பட்டது.
ராஜபக்ஷ தனது ஒரு கூட்டத்திற்காக மாத்திரம் 7 முதல் 8 கோடி ரூபா வரை செலவிடுகிறார். இப்படி செலவு செய்ய வேண்டுமா என நாம் மக்களிடம் கேட்கிறோம்.
இவ்வாறு பெருந்தொகை மக்கள் பணத்தை ராஜபக்ஷ வீண் விரயமாக்கி வருகிறார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp0.html
மைத்திரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்! பொலிஸ் மா அதிபரிடம் கோரும் அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 01:02.13 PM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
அரசாங்கம் எந்த தேர்தல் வன்முறை செயல்களையும் அனுமதிக்காது எனவும் டளஸ் அழகபெரும மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkpz.html
குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றார்?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:52.15 PM GMT ]
மூன்று புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுடன் கே.பி என்ற குமரன் பத்மநாதன் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
அவர்கள் எங்கு சென்றனர், எந்த விமானத்தில் சென்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்கள் விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லும் போது ஒரே ஒரு பாதுகாப்பு அதிகாரி மாத்திரமே அங்கு பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குமரன் பத்மநாதனை நாட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் போது அடையாளம் காணமுடியாதபடி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குமரன் பத்மநாதன் மலேசியாவில் கைது செய்யப்பட்டதுடன் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டார். அவ்வப்போது நடத்தப்பட்ட தேர்தல்களின் போது பத்மநாதன் அரசாங்கத்தின் பிரதிநிதியாக வடக்கில் செயற்பட்டார்.
இம்முறையும் இறுதி வரை வடக்கு மாகாணத்தில் ஜனாதிபதியின் தேர்தல் பணிகளுக்கு அவர் பங்களிப்பு வழங்கி வந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkpy.html
Geen opmerkingen:
Een reactie posten