தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

மகிந்தவின் சேறுபூசும் பேஸ்புக் கணக்குகள்

பொன்னகர் மக்களுக்கு லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 02:07.38 PM GMT ]
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க, லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை இன்னொரு கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொன்னகர் மக்களுக்க நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.
பொன்னகர் வடக்கில் இருநூற்று ஐம்பது வரையான மக்களுக்கு ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை நேற்று வழங்கியுள்ளனர்.
ஏற்கனேவே லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை கோணாவில் கிழக்கிலும்  நூற்றுக்கு மேற்பட்ட மக்களுக்கு இவ்வாறான பொதிகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று பொன்னகர் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் மோகனதாஸ் தலைமையில் இந்த வெள்ள நிவாரண பொதிவழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், பா.உறுப்பினர் சி.சிறீதரன், லண்டன் நம்பிக்கை ஒளி இணைக்கும் இதயங்கள் அமைப்பின் இணைப்பாளர் சுபாஸ் மற்றும் தபேந்திரன் அமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், உறுப்பினர் சுகந்தன், தவபாலன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த ஜெயக்குமார்,  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp2.html


மகிந்தவின் சேறுபூசும் பேஸ்புக் கணக்குகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 01:52.17 PM GMT ]
மகிந்த ராஜபக்ஷவின் இணையத்தள பிரச்சாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அடுத்த சில தினங்களுக்குள் அதனை மீளகட்டியெழுப்புவதற்காக இணையத்தள வசதிகளை வழங்கி வரும் சில இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன் நூற்றுக்கணக்கான பேஸ்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மகிந்த ராஜபக்ஷவின் பேஸ்புக் கணக்கில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பகிரப்படும் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு பெயர்களில் பேஸ்புக் கணக்குகளை ஆரம்பிக்க மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள பேஸ்புக் கணக்குகளில் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரங்கள் மாத்திரமல்லது மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் சேறுபூசும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkp1.html

Geen opmerkingen:

Een reactie posten