[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:05.51 PM GMT ]
இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க, அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் சட்ட மற்றும் நீதி மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, இராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முகமாக பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbko4.html
கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இருவர் மஹிந்தவிற்கு ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:22.51 PM GMT ]
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பான உறுப்பினர்களான கே.ஜெயராஜா மற்றும் எம்.மயூரன் ஆகிய இரு உறுபப்பினர்களும் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்த கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்த விடயம் தொடர்பாக எனக்கும் தகவல் கிடைத்திருந்தது. பின்னர் நான் அவர்களுடன் தொடர்பு கொண்டுகேட்டபோது,
தாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப் போவதாகவும், அதற்காக கொழும்பு சென்றிருப்பதாகவும் தங்களை மன்னித்து விடுங்கள், எங்களை கூட்டமைப்பு அவ்வாறு நடத்திவிட்டது என அவர்கள் கூறியதாக தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbko5.html
விகாரைகளுக்கு துணி அன்பளிப்பு! ஆளுங்கட்சியின் நடவடிக்கையில் தேர்தல் திணைக்களம் குறுக்கீடு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:37.26 PM GMT ]
ஆளுங்கட்சியினரால் புத்தளம் பிரதேசத்தில் உள்ள விகாரைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த சில் ரெதி எனப்படும் வெள்ளைத் துணிகள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல் அறிந்தவுடன் தேர்தல் ஆணையாளர் உடனடியாக வெள்ளைத் துணி விநியோகத்தை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வெள்ளைத்துணிகள் போயா தினங்களில் விகாரைகளில் முழுநாள் வழிபாடு மேற்கொள்ளும் நபர்களுக்கு வழங்கும் நோக்கில் விநியோகிக்கப்படவிருந்தன.
எனினும் அவற்றின் பொதிகளின் மேற்புறத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் சின்னமும் இடம்பெற்றிருந்தன.
இதன் காரணமாகவே குறித்த துணிகள் விநியோகம் தேர்தல் ஆணையாளரால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbko6.html
முஸ்லிம்களின் வாக்குகள் எனக்கே! - தேர்தலை கேலியாக கருதாதீர்கள்: நாங்கள் கற்களை வீசினால் சரியாக வீசுவோம் - மகிந்த ராஜபக்ஷ
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:46.47 PM GMT ]
முஸ்லிம் மக்களின் வாக்குகள் தனக்கே கிடைக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குருணாகல் யாப்பஹூவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்களுக்காக தனியான பிரதேசம் ஒன்றை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் நிராகரித்தேன்.
நாட்டை நேசிக்கும் முஸ்லிம் மக்கள் தமது வாக்கை எனக்கே வழங்குவார்கள்.
அதேவேளை நாட்டின் இலவச கல்வியை இல்லாமல் செய்ய இடமளிக்க போவதில்லை எனவும் அரச துறையில் ஆட்குறைப்புச் செய்ய இடமளிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை கேலியாக கருத வேண்டாம்: நாங்கள் கற்களை வீசினால் சரியாக வீசுவோம். மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி தேர்தலை சிலர் நகைப்புக்குட்படுத்தியுள்ளதாக, கினிகத்தேனை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியை வெற்றி செய்யும் முகமாக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றுகையில்,
இவர்கள் நாளாந்தம் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர். அண்மையில் இரவு வேளையில் கற்பிரயோகங்கள் நடத்தப்பட்டன. இரண்டு கற்களை வீசியுள்ளனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நாங்கள் கற்களை வீசினால் சரியாக வீசுவோம். மேடையில் கல் ஒன்று விழுந்துள்ளது. இன்னும் சில தினகங்களில் என்ன செய்வார்கள் என தெரியவில்லை. இது ஜனாதிபதி தேர்தல் நகைக்கதக்க விடயம் அல்ல. இதனால் இதனை நகைப்புக்குட்படுத்த வேண்டாம் என எமது முன்னால் செயலாளரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு சகல சூழ்ச்சிகளையும் தோல்வியடைய செய்து எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் பொய் பிரசாரங்கள் முன்எடுக்கப்படுகின்றன. கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யும் போது வெற்று இருக்கைகள் வைக்கப்படுகின்றன. அந்த வெற்று இருக்கைகள் அமர பெரியவர்கள் வர இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.
இதனையே ஜனவரி எட்டாம் திகதி கூறுவார்கள். இதனால் மக்களாகிய நீங்கள் பொய் பிரசாரங்களை நம்பாமல் சிந்தித்து செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbko7.html
Geen opmerkingen:
Een reactie posten