தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ! தடுமாறிய டக்ளஸ்

நான் இராஜினாமா செய்து விட்டதாக எதிரணியினர் பொய் பிரசாரம் செய்வர்!- கண்டியில் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 07:15.04 AM GMT ]
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து நான் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக எதிர்வரும் 8ம் திகதி எதிரணியினர் நிச்சயம் பொய்ப் பிரசாரம் செய்வார்கள். அவ்வாறான செயற்பாட்டை இவர்கள் செய்வார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
காரணம் வெறுமனே பொய்ப் பிரசாரங்களிலேயே இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் 8ம் திகதி ரணில் விக்ரமசிங்க பின்னுக்கு போய்விடுவார் என்பது உறுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஒருவர் என்னிடம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி பஷில் போய்விட்டாரா என்று கேட்டார்.  நான் உடனே பஷிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி " பஷில் நீங்கள் எங்கே போய்விட்டீர்களா" என்று கேட்டேன். அந்தளவுக்கு பொய்ப்பிரசாரம் செய்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 1815ம் ஆண்டு கண்டியில் சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டமை நாட்டுக்குத் தெரியும். தற்போது 2015ம் ஆண்டில் சதி முயற்சி நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுபபும் எமக்கு உள்ளது. எனவே நாட்டை காப்பாற்றுவதற்காக 8ம் திகதி வெற்றிலை சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.
கண்டியில் உள்ள மக்கள் கடந்தகால சம்பவங்களை நன்றாக உணர்ந்தவர்கள். அன்று தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது முழு நாடும் வேதனை அடைந்தது. பயங்கரவாதம் அந்தளவுக்கு கொடூரமாக இருந்தது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அன்று உடன்படிக்கை செய்து புலிகளுக்கு நாட்டின் ஒரு பகுதியை வழங்கியது. நான் பதவிக்கு வரும்போது எனக்கு பகுதியும் சந்திரிகா குமாரதுங்க கூறுவதைப் போன்று மிஸ்டர் பிரபாகரனுக்கு ஒரு பகுதியும் காணப்பட்டது. சூனியப் பிரதேசமும் காணப்பட்டது. நாடு பிரிந்து காணப்பட்டது.
அவ்வாறான யுகம் நாட்டில் காணப்பட்டது. இராணுவத்துக்கு சீருடை தலைக்கவசம் என எதுவும் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் இராணுவத்துக்கு இளைஞர்களை சேர்த்து பலப்படுத்தினோம். எனது மகனையும் கடற்படைக்கு அனுப்பி்னேன். மக்கள் எம்முடன் இருந்தமையினால் யுத்தத்தில் வெற்றி கொண்டோம். நாட்டை மீட்டோம். அவ்வாறு மீட்ட நாட்டை காட்டிக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்.
அதன் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம். 2017ம் ஆண்டு ஆகும் போது கண்டியிலிருந்து கொழும்புக்கு ஒரு மணிநேரத்தில் செல்லும் பாதை வரும். தற்போது மூன்றில் ஒரு பகுதி நிதியில் அபிவிருத்தியை செய்யலாம் என்று குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். ஆனால் ரணிலினால் மூன்றில் ஒரு பகுதியினாலும் அபிவிருத்தி செய்ய முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.
நல்லாட்சி குறித்துப் பேசுகின்றனர். பட்டலந்த விவகாரத்தை மறந்துவிட்டனரா? நான் அன்று இளைஞர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஜெனிவா சென்றேன். அப்போது சிறிசேன இருக்கவில்லை. நல்லாட்சியை விரும்பினால் ஏன் 30 வருட யுத்தத்தை முடிக்கவில்லை. நாங்கள் நல்லாட்சி இருந்தமையினால்தான் 30 வருட யுத்தத்தை 4 வருடங்களில் முடித்தோம்.
தற்போது பொய்க் குற்றச்சாட்டுககளை முன்வைக்கின்றனர். 10 வருடங்கள் மைத்திரிபால சிறிசேன எனது அரசாங்கத்தில் இருந்து மூன்று அமைச்சுக்களை வகித்தார். அவறறில் வேலை செய்ய முடியாததால் இன்று அந்தப் பக்கம் சென்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.
விவசாயிகளின் மகன் என்று தன்னை கூறுகின்றார். அவ்வாறு கூறும் அவர் உர நிவாரணத்தை மறந்துவிட்டார். தற்போது இலவசக் கல்வியையும் இல்லாதொழிக்க முற்படுகின்றனர். ஐக்கிய தேசிய கட்சியில் வேட்பாளர் இல்லாதுபோய்விட்டனர். அதனால்தான் அக்கட்சியின் செயலாளர் எமது பக்கம் வந்தார்.
நிறைவேறறு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவார்களாம். நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் நலனுக்காகவுமே பயன்படுத்தினேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu0.html
காங்கேசன்துறை - யாழ் ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 07:32.55 AM GMT ]
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அத்துடன் அவர்கள் அதே ரயிலில் பயணம் செய்து யாழ். ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.
ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பெருளமளவான பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ரயில் சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவிருந்ததாகவும், இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu2.html
மகிந்த ராஜபக்ஷவின் இரகசிய திட்டங்களை கசிய விடும் அமைச்சர்கள்!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:02.08 AM GMT ]
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் பலர் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக பணியாற்றுவதில்லை எனவும் அவர்கள் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
அத்துடன் அரசாங்கத்திற்கு தற்போது எந்த களவான வேலைகளையும் செய்ய முடியாதிருப்பதாகவும் சகல தகவல்களை இந்த அமைச்சர்கள் எதிரணிக்கு தெரியப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு மேற்கொள்ளவிருந்த இரகசியமான ஊடக நடவடிக்கை ஒன்றையும் அவர்கள் எதிரணிக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சுயாதீன தொலைக்காட்சி சகல அதிகாரங்களையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் சுதர்மன் ரெந்தலியகொட மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் தேசிய ரூபவாஹினியின் முழுப் பொறுப்பு அதன் பணிப்பாளர் சந்திரிபால லியனகேவிடம் உள்ளதுடன் அரச தகவல் திணைக்களத்தின் விசேட ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஹரிந்திரநாத்தின் பொறுப்பின் கீழ் உள்ளது.
இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ஷவினரின் ஆதரவாளர்கள். எனினும் அரசாங்கம் மேற்கொள்ளும் இரகசியமான சகல ஊடக நடவடிக்கைகளும் எதிரணிக்கு கசிந்து வருகிறது.
திட்டங்கள் செயற்படுத்தப்படும் முன்னரே தகவல்கள் வெளியாகி விடுவதால், அரசாங்கம் அதனை முற்றாக கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu4.html
பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ! தடுமாறிய டக்ளஸ்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:05.41 AM GMT ]
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ், ஜனாதிபதி மகிந்தவை பொது எதிரணி வேட்பாளர் என கூறியுள்ளார்.
இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான பிரச்சாரக் கூட்டத்தில்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹிந்தவை வாழ்த்தி, அவரை ஆதரிக்கக்கோரி, வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி உரையாற்றினார். 
அந்தச் சமயத்தில் உரையின் இடையே “பொது எதிரணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ” என தடுமாறி வாசித்து பின்னர் திருத்தி வாசித்துக்கொண்டார்.
இதன்போது டக்ளஸ் தான்கொண்டு வந்திருந்த அறிக்கை ஒன்றை வாசித்தார்.
நான் நடைமுறைச் சாத்தியமான அரசியலை நடத்திவருகிறேன். நான் அரசியல்வாதியல்ல, நான் ஓர் அரசியல் போராளி.
எனது நடைமுறைச்சாத்தியமான வழியில் அழிவுகளுக்கோ இடப்பெயர்வுக்கோ மக்களை இட்டுச் செல்லவில்லை. பதிலாக மக்களுக்கு எது சரியோ அந்த வழியைப் பின்பற்றிவருகிறேன்.
ராஜித சேனாரட்ண அமைச்சராக ஜனாதிபதியுடன் இருக்கும்போது என்னை புகழ்ந்து வந்தார். இப்போது விமர்சிக்கிறார். நான் எதுவுமே பேசுவதில்லை எனத் தெரிவிக்கிறார்.
உண்மைதான். நான் உணர்ச்சிவசப்படுத்த, பெயர், புகழுக்காகப் பேசுவதில்லை. மக்களுக்கு எது தேவையோ அதைப் பெற்றுக் கொடுப்பதற்காகப் பேசுகிறேன் என்று கூறிய அமைச்சர் மாம்பழக் கதையையும் கூறினார்.
கூட்டமைப்பையும் வடமாகாண சபையையும் வழமைபோலவே விமர்சித்தார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொது எதிரணியினரை விமர்சித்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவந்த முழுப்பொறுப்பும் தங்களையே சாரும் என அவர்கள் புலம்பி வருகின்றனர். சந்திரிகா பிரபாகரனின் பெயரை நல்லதற்காகச் சொல்லவில்லை. அதை மக்கள் தவறாக விளங்கிக்கொண்டனர்.
அவரரே போரின் வெற்றிக்கு முதல் வழிசமைத்தார் எனக் கூறினார். 2009ஆம் ஆண்டு ஜனாதிபதி வெளிநாடு சென்றிருந்த சமயம் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு மைத்திரிபாலவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் அதன்போது புலிகளை அழிக்க தானே கொத்துக்குண்டுகளை வீசச் செய்தார் என்றும் பொது எதிரணி வேட்பாளர் கூறிவருகிறார்.
இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவும் போரின் வெற்றியை தன்னுடையதென்று கூறிவருகிறார். இதில் உண்மையான வெற்றியாளர் யார்? அது மக்களாகிய உங்களுக்கே தெரியும்.
போரை முடிவுக்குக் கொண்டுவந்து வடபகுதியை அபிவிருத்தி செய்த பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தவையே சாரும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu5.html

Geen opmerkingen:

Een reactie posten