[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:43.31 AM GMT ]
டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்காது என்று கூறப்பட்ட போதிலும், அதன் கன்னிப் பயணத்திலேயே மூழ்கியது போல, மகிந்த அரசை அசைக்க முடியாது என்று ஆணவத்துடன் இருந்த ஆட்சியாளர்கள் இப்பொழுது டைட்டானிக் கப்பலைப் போல் மூழ்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறு நேற்று நீர்கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மேல் மாகாண சபை உறுப்பினருக்கு பயந்து அரசு அவரை சிறையில் தள்ளியது. அதற்கான தண்டனையை வரும் 8ம் திகதி நீர்கொழும்பு மக்கள் அரசுக்கு வழங்க தயாராகி விட்டார்கள்.
எமது ஆட்சியின் கீழ் வெளிநாட்டு படகுகளின் மீன்பிடிக்கு தடை செய்வதோடு, நீர்கொழும்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
அத்துடன் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
மைத்திரிக்கு வாக்களிப்பதே ஏழை மக்களின் வளமான வாழ்வுக்கான வழி என்றும் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt6.html
சமுர்த்தி கொடுப்பனவு எனக் கூறி வேகும் வெயிலில் மகிந்தவின் பிரச்சாரத்திற்கு மக்கள் அழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 06:59.34 AM GMT ]
இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந் நிலையில் மகிந்தவின் பரப்புரைக்கு வந்தால் சமுர்த்தி கொடுப்பனவு என்றவுடன் கைக்குழந்தைகளுடன் சமுர்த்திப் பயனாளிகளும் பொது மக்களும் கைக் குழந்தைகளுடன் வெயில் காய்ந்து கருவாடாகிப் போய் கூட்ட்த்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலந்துக்கொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு 450 இ.போ.ச பேரூந்துக்கள் மூலம் மக்கள் இக்கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பேருந்துகளில் பெயர் பலகைகளுக்கு பதிலாக கிராம சேவகர் பிரிவுகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் சமூர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபாய் 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கூறி மக்களை அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmt7.html
கல்முனை மாநகர சபையின் வாகனம் விபத்து! ஆறு பேர் காயம்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 07:01.40 AM GMT ]
கல்முனை மாநகர சபையின் பிக்கப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சபையின் பிரதம கணக்காளர் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கந்தளாய் பிரதான வீதி வளைவொன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணக்காளரும் சாரதியும் மேலும் நால்வரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதேவேளை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கணக்காளர் படுகாயமடைந்துள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு- பின்னர் பேராதெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் அவசர உத்தரவின் பேரில் ஆணையாளரின் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmuy.html
அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 07:13.01 AM GMT ]
அவர் நேற்று தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 6 மாதங்களாக ஒரு அணியுடன் இணைந்து அரசாங்கத்துடன் இணையும் முனைப்புக்களை மேற்கொண்டு வந்தார்.
இதனை நாங்கள் அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரிடம் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கொண்டு வரும் அரசியல் ரீதியான கட்சிக்கு எதிரான நடவடிக்கை குறித்து 6 மாதங்களுக்கு முன்னர் நான் கூறியிருந்தேன்.
அத்தநாயக்க கட்சியை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் தனிப்பட்ட ரீதியிலான அரசியல் இலாப நோக்கில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர் என நான் கூறியிருந்தேன். அவர் பற்றிய தீர்மானம் ஒன்றை எடுக்காத குறை எமது கட்சி தரப்பில் இருந்தது என்பது உண்மை.
ரணில் மற்றும் மைத்திரிபால இடையில் உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுவது பொய்யானது.
அத்தநாயக்க வெளியிட்ட அறிக்கையும் போலியானது. அதனை அவர்கள் இருவரும் அந்த போலி உடன்படிக்கையை புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த உடன்படிக்கையில் இருக்கும் கையெழுத்து போலியானது எனவும் விஜேதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmuz.html
Geen opmerkingen:
Een reactie posten