[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:19.01 AM GMT ]
அரசாங்கத்தை மாற்றியமைக்கும் தீர்மானங்களை எடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது.
நாட்டில் பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
சுயாதீனமான பொலிஸ் சேவை மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு வாய்ந்த தீர்மானம் எடுக்கப்பட வேண்டியுள்ளது.
இதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரசாந்த ஜயக்கொடி, விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத காரணத்தினால் தாம் அரசியல் அடைக்கலம் கோரியதாக பிரசாந்த ஜயக்கொடி இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
நீண்ட காலமாக இலங்கையின் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக பிரசாந்த ஜயக்கொடி கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkuz.html
குறிபார்த்துச் சுடும் ஜெர்மானியர்கள் இலங்கை வருகை! ஆளுங்கட்சி ஏற்பாடு
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:32.22 AM GMT ]
இது தொடர்பான தகவலை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைக்கும் நோக்கில் குறித்த ஸ்னைபர் துப்பாக்கிதாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த ஸ்னைபர்களைக் கொண்டு, அரசாங்கம் தனது பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி அதன் மூலம் அனுதாப அலையை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku0.html
ஊடக அமைச்சரின் செயலாளர் பௌத்த பிக்கு ஒருவரைத் தாக்கியதாக முறைப்பாடு!
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:33.00 AM GMT ]
கண்டி பிலவெல ஸ்ரீ இசிபதனாராம விஹாராதிபதி பேராதெனியே தம்மசேன தேரர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வத்தேகம பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஹாரைக்கு அருகாமையில் சத்தமொன்று கேட்டதனைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு தாம் சென்றதாக பௌத்த தேரர் தெரிவித்துள்ளார்.
9ம் திகதியின் பின்னர் காவி உடையை கழற்றி விடுவேன் என லின்டன் விஜேசிங்க என்னை அச்சுறுத்தினார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது ஊடக அமைச்சர் கெஹலியவும் சம்பவ இடத்தில் இருந்தார் என தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவத்தை சமாதானப்படுத்த ஊடக அமைச்சர் முயற்சித்தார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku1.html
யாழில் ஒரு வாக்குச் சீட்டு 500 ரூபாய்! விலைக்கு வாங்கும் ஈபிடிபி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:37.19 AM GMT ]
வடமராட்சியிலும் மற்றும் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வாக்குச் சீட்டுக்கு 500 ரூபாய் கொடுத்து பெற்றுவருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் வாக்குச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள பல பேரம் பேசல்களும் இடம்பெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku2.html
ராஜபக்ஷ இனத்தை இல்லாதொழிப்போம்! தலவாக்கலையில் ரணில் சூளுரை
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:47.10 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
மைத்திரிபால சிரிசேனவின் அரசாங்கம் வந்தால் மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும். அரசாங்க துறையிலும், தனியார் துறையிலும் பணி புரிகின்றவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படும். பல்கலைகழகமும், பாடசலைகளும் ஆரம்பிக்கவுள்ளோம்.
அத்தோடு இந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டில் உள்ள தமிழ் இன மக்களை நான்காவது இடத்திலும், மூஸ்லிம் இன மக்களை மூன்றாவது இடத்திலும், சிங்கள இன மக்களை இரண்டாவது இடத்திலும், ராஜபக்ஷ இனத்தை முதலாவதாகவும் வைத்துள்ளார்.
இதனால் ராஜபக்ஷவை இனத்தை இல்லாதொழித்து நாங்கள் அனைவரும் ஒரு நாட்டு மக்களாக இணைந்து செயற்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku3.html
Geen opmerkingen:
Een reactie posten