தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

"அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்": மஹிந்தவுக்கு எதிராக யாழ். பல்கலையில் சுவரொட்டிகள்

மைத்திரி-ரணில் ஒப்பந்தம் போலி! ரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:00.09 AM GMT ]
மைத்திரி-ரணில் ஒப்பந்தம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்க முன்வைத்த ஆவணம் போலியானது என்று அரசாங்க ரசாயனப் பகுப்பாய்வாளர் அதிரடியாக நிராகரித்துள்ளார்.
தனி ஈழம் வழங்குவது உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று இருப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டியது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து அரசாங்கத்துக்கு தாவி, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் ஆவணம் ஒன்றையும் முன்வைத்திருந்தார்.
எனினும் மைத்திரி தரப்பினர் இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதன் பேரில் குறித்த ஆவணம் ரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது திஸ்ஸ முன்வைத்த ஆவணம் போலியானது என்று ரசாயனப்பகுப்பாய்வாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த ஆவணத்தில் இருக்கும் கையொப்பங்கள் ஸ்கான் செய்து எடுக்கப்பட்டு, போலியான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் ரசாயனப் பகுப்பாய்வாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மைத்திரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை, போலியான கையெழுத்து முயற்சி, போலியான ஆவணம் தயாரிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க மீது வழக்குத் தொடரப்படவுள்ளது. இந்த வழக்கு முடிவில் திஸ்ஸ அத்தநாயக்க பெருந்தொகைப் பணத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டி ஏற்படும் என்று சட்டத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks4.html

"அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்": மஹிந்தவுக்கு எதிராக யாழ். பல்கலையில் சுவரொட்டிகள்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 06:20.01 AM GMT ]
மஹிந்தவுக்கு எதிராக இன்று யாழ் பல்கலைக்கழக  வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
"எமது தேசத்தைச் சுடுகாடாக்கியவர்களுக்கு பதிலடி கொடுப்போம்", "அன்னப் பறவைக்கு வாக்களிப்போம்" என்று அந்த  சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டாம் என குறிப்பிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, போன்ற இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbks6.html

Geen opmerkingen:

Een reactie posten