[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:29.31 AM GMT ]
எதிர்வரும் 5 நாட்களில் ஐந்து அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்டக்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சார மேடைகளில் இந்த அமைச்சர்கள் மைத்திரிபாலவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் உரையாற்றுவார்கள்.
தேர்தல் பிரச்சார மேடைகளில் தோன்றுவார்கள்.
இதுவரையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எதிர்காலத்தில் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர் என ராஜித சேனாரட்ன சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களிலும் கட்சி தாவல்கள் இடம்பெறும் - கெஹலிய
எதிர்வரும் நாட்களிலும் கட்சித் தகாவல்கள் இடம்பெறும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்க்கட்சிக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் ஆளும் கட்சிக்கும் எதிர்வரும் மூன்று நான்கு நட்களில் இணைந்து கொள்ளக் கூடும்.
இந்த நாட்களில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்கின்றார்கள்.
அதேபோன்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இவ்வாறான கட்சத் தாவல்களை தொடர்ந்தும் எதிர்பார்க்க முடியும்.
நான், பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவும் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான கதைகள் எதிர்வரும் நாட்களிலும் பிரச்சாரம் செய்யப்படும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று கட்சித் தாவல் தொடர்பில் அமைச்சரிடம் கோரிய போது இவ்வாறு பதிலளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo4.html
உரிமைகளுக்காக மக்கள் சக்தியை முன்கொணரப் போவதாக சர்வோதய தலைவர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:48.43 AM GMT ]
காந்தீய வழி- சர்வவோயதம் சமூக நிறுவனத்தின் தலைவர் ஏ.டி.ஆரியரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
லச்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், சமய, அரசியல் மற்றும் சிவில் சமூக தலைவர்கள், தேசத்துக்கான நல்வழி கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது நாட்டின் சமூகத்தில் காணப்படும் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் இன்று மக்கள் மத்தியில் நீதித்துறை, சட்டம், பக்கச்சார்மின்மை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஆரியரத்ன சுட்டிக்காட்டினார்.
பாரியளவில் லஞ்சம் பெறும் நடவடிக்கைகளும் தரகுப்பெறும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo5.html
களுவாஞ்சிக்குடியில் மைத்திரியின் ஆதரவாளரின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 02:50.26 AM GMT ]
நேற்று இந்த தாக்குதல் இடமபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேநீர் மற்றும் பலசரக்கு கடைகளே உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இரண்டு கடைகளிலும் ஒட்டப்பட்டிருந்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்டிகளை, இனந்தெரியாத நபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை கிழித்து சேதப்படுத்திவிட்டுச் சென்றிருந்தனர்.
பின்னர், மீண்டும் அக்கடைகளில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சுவரொட்கள் நேற்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, கடை உடைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. தனது கடையை உடைத்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாக தேநீர்க்கடை உரிமையாளர் தெரிவித்தார்.
பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரின் குண்டர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo6.html
இன்றும் தபால் மூலம் வாக்களிக்கலாம்!
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 03:47.27 AM GMT ]
தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி சந்தர்ப்பமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் மூல வாக்காளர்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் இன்று தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்களில் 85 வீதமான வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.பொலிஸார் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விசேட தினமொன்று ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கு அறிவிக்கப்பட்ட தினங்களின் பின்னரே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆகியன ஜனாதிபதி தேர்தல் குறித்த உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblpy.html
Geen opmerkingen:
Een reactie posten