தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 januari 2015

அங்கஜனின் அடியாட்களிடம் அறை வாங்கிய டக்ளஸின் சகோதரர்!

ஜனாதிபதி மஹிந்தாவின் யாழ்.மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் அங்கஜன் அணியினரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் அடிவாங்கிய பரபரப்பு சம்பவம் நேற்று யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருக்கின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது ஈ.பி.டி.பி அணியினரும், அங்கஜன் அணியினரும் ஜனாதிபதிக்கு அதிகம் விசுவாசம் உள்ளவர்கள் யார் என்பதை காண்பிப்பதற்காக தேர்தல் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கஜன் அணியினரில் சில இளைஞர்களை, ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரர் தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த மேடைக்கு அருகிலிருந்த அங்கஜனின் சாரதியும் டக்ளஸின் சகோதரர் மீது தாக்குதல் நடத்தினார்.
கடுமையாக அடிவாங்கிய ஈ.பி.டி.பியினர் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblo7.html

Geen opmerkingen:

Een reactie posten