ராஜபக்ச ஆட்சியிலிருக்கும் போதே 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்!– ராஜித
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:05.47 AM GMT ]
அரசாங்கமொன்றில் அங்கம் வகித்து அந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் போதே இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னதாக இவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு ஆளும் கட்சியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
1956ம் ஆண்டு முதல் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ தோற்கடிப்பதற்காக ஆளும் கட்சியிலிருந்து ஒரு தொகுதியினர் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கம் கவிழ்ந்துள்ளது.
2001ம் ஆண்டில் ஆளும் கட்சியை தோற்கடிக்கும் நோக்கில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டிருந்தார்கள்.
இவ்வாறு ஆளும் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதனைத் தொடர்ந்து சந்திரிக்கா பண்டாரநயாக்கவின் அரசாங்கம் கவிழ்ந்தது.
எனினும், தற்போது பொது வேட்பாளர் மைத்திரிபாலவின் கரத்தைப் பலப்படுத்த 25 ஆளும் கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்று (31) மட்டும் ஆளும் கட்சியின் 20 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர் என டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnv6.html
இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: விதிமீறல்கள் இருமடங்காக உயர்வு
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 10:59.16 PM GMT ] [ பி.பி.சி ]
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல்இதுவரை 535 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 154 வன்முறை சம்பவங்களும் அடங்கும் என்று தெரிவித்த அவர், 29 தனிநபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒரு குண்டுத் தாக்குதல் உட்பட ஒன்பது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ரோகன ஹெட்டியாராச்சி, தனிப்பட்ட சொத்துக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட 30 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்குள் 32 தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குருநாகலை, புத்தளம், கண்டி ,களுத்துறை, காலி, ஆகிய மாவடடங்கில் இருந்து அதிகபட்ச வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும்போது இந்த முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயல்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார் ரோகன ஹெட்டியாராச்சி.
இந்த தேர்தலில் அரச உடைமைகளைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது மற்றும் அரச அதிகாரங்கள் தவறான முறையில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் சம்பவங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார் பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnv3.html
2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர தீர்வு கிடைக்கும்! சம்பந்தன்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 09:24.14 PM GMT ]
இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இலங்கையின் தற்போதைய ஆட்சி மோசமடைந்து வருகின்றது. எனவே, இந்த நிலைமையில் கட்டாயம் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். இது இந்த நாட்டில் வாழும் மூவின மக்களின் விருப்பமாக உள்ளது.
விசேடமாக நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்கின்றது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.
எனவே, தமிழரின் பிரச்சினைக்கு 2015 இல் கெளரவமான - நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் - எதிர்பார்ப்புடன் மக்களும் நாமும் இருக்கின்றோம்.
தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு எமக்குண்டு. இதற்கேற்ப நாம் செயற்பட்டு வருகின்றோம்.
கடந்த காலங்களில் தீர்வு விடயம் தொடர்பில் நாம் எடுத்த முயற்சிகள் துரதிஷ்டவசமாகக் கைகூடவில்லை. எனினும், இந்த முயற்சிகள் தொடரும்.
2015 புதுவருடத்திலாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்ற வகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதையும், அதற்கான காரணங்கள் என்ன என்பதையும் விளக்கி நாம் செவ்வாய்க்கிழமை (நேற்றுமுன்தினம்) கொழும்பில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் அறிக்கை ஒன்றை மூன்று மொழிகளில் வெளியிட்டுள்ளோம். இதனை அனைத்து மக்களும் ஊடகங்கள் வாயிலாக வாசித்து - கேட்டு இருப்பார்கள்" - என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம்.பி.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnv2.html
Geen opmerkingen:
Een reactie posten