தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

ஜனாதிபதி தேர்தலில் வட, கிழக்கு தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்: கி.சேயான்

இராஜதந்திர நியதிகளை மீறி சவூதிக்கான தூதுவர் மஹிந்தவுக்கு பிரச்சாரம்! வீட்டுக்கு வீடு வாக்குச் சேகரிப்பு
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 11:31.06 PM GMT ]
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் சாஹுல் ஹமீது மொஹம்மத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களில் நேரடியாக ஈடுபட்டுள்ளார்.
இராஜதந்திர சேவை நியதிகளின் பிரகாரம் எந்தவொரு ராஜதந்திரியும் பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
எனினும் சவூதி அரேபியாவுக்கான தூதுவர் சாஹுல் ஹமீது கொழும்பு மாநகர எல்லைக்குள் வீடுவீடாகச் சென்று ஜனாதிபதிக்கு வாக்குச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் கொழும்பின் அபிவிருத்தி முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இவரது நடவடிக்கை ஏனைய இராஜதந்திரிகள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
இதுவரை காலமும் அலரி மாளிகைக்குள் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த பல இராஜதந்திரிகள் எதிர்வரும் நாட்களில் வெளியில் இறக்கப்பட்டு, ஜனாதிபதியின் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt4.html
மக்களின் வாக்குரிமையை கொள்ளையிட அரசாங்கம் முயற்சி!– கபீர் ஹாசீம்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 11:40.36 PM GMT ]
மக்களின் வாக்குரிமையை கொள்ளையிடுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினமன்று வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதன் மூலம் தேர்தலை குழப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
சுதந்திரமான முறையில் மக்கள் வாக்களிப்பதனை தடுக்கும் நோக்கில் வன்முறகைள் கட்டவிழ்த்துவிடப்பட உள்ளது.
இந்த விடயம் அம்பலமானதைத் தொடர்ந்து கட்சிää தேர்தல் ஆணையாளருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
அரசாங்கம் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தால் அவற்றை அச்சமின்றி எதிர்நோக்க எதிர்க்கட்சிகள் தயார்.
அரச சொத்து பயன்பாடு, சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றை நோக்கும் போது, எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் சுயாதீனமானதும் நீதியானதுமாக நடைபெற வாய்ப்பு கிடையாது என கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt6.html
அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய ஆறு பேருக்கு எதிராக வழக்கு
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 11:50.44 PM GMT ]
அரச இரகசியங்களை அம்பலப்படுத்திய ஆறு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.
அரச இரகசியங்களை பாதுகாக்கும் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கிய முன்னாள் அரச அதிகாரிகள் ஆறு பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இவர்களில் ஒருவர் வெளிநாட்டு உளவுப் பிரிவின் முகவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் அரச இரகசிய சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை விதிக்கப்பட்டதில்லை.
குறித்த சந்தேக நபரினது; அவரது உறவினர்களினதும் சொத்து விபர்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்த அரசாங்க அதிகாரிகளுக்கு மேலதிகமாக தமிழ் அரசியல்வாதிகள் ஐவர் தொடர்ச்சியாக மேற்குலக நாடுகளுக்கு தகவல்களை வழங்கியுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலான ஆவணமொன்றை புலனாய்வுப் பிரிவிற்கு வெளிநாட்டில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt7.html
சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன!– சுசில் பிரேமஜயந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:04.48 AM GMT ]
சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்த சகல ஆயத்தங்களும் செய்யப்ட்டுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமயஜயந்த தெரிவித்துள்ளார். 
சுயாதீனமான முறையில் தேர்தலை நடாத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
கூட்டமைப்பு மிகவும் வலுவான பிரச்சாரமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமோக வெற்றியீட்டுவார்.
வன்முறைகளில் ஈடுபடாது, தேர்தல் சட்டங்களை உச்ச அளவில் பேணிப் பாதுகாக்கும் ஒர் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வன்முறைகளில் ஈடுபடுவதனால் எவ்வித பயனும் கிடையாது.
சில தரப்பினர் குழப்பங்களை விளைவிக்க முயற்சித்து வருவதாக சுசில் பிரேமஜயந்த சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbluy.html
குமார் குணரட்ணம் கைதுசெய்யப்படலாம்? - குடிவரவுத் திணைக்களம்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:56.32 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டால், முன்னிலை சோசலிஸக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் குமார் குணரட்ணம் கைதுசெய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் கூற்றுப்படி குமார் குணரட்ணம் அரசியலில் ஈடுபட வேண்டுமாயின் தமது அனுமதியை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குணரட்ணம், 30 நாள் சுற்றுலா வீசாவிலேயே இலங்கை வந்துள்ளார்.
எனவே அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது.
இந்தநிலையில் நாளை கடவத்தையில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் குணரடணம் உரையாற்றவிருந்தார்.
எனினும் அங்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக முன்னிலை சோஸலிஸக் கட்சியின் பேச்சாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2012ல் குணரட்ணம் இலங்கைக்கு வந்திருந்த போது வெள்ளைவான் ஒன்றினால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு நாடும் கடத்தப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblu1.html
ஜனாதிபதி தேர்தலில் வட, கிழக்கு தமிழர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்: கி.சேயான்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 02:04.48 AM GMT ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வட,கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழரிக்கட்சியின் இளைஞரணி தலைவர்கள் அவசர அழைப்பினை விடுத்துள்ளார்கள்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோன் விடுத்துள்ள அறிக்கையில்,
இன்று எம்மிடம் எஞ்சியிருப்பது வாக்குப்பலமே தவிர வேறொன்றும் இல்லை அவ்வாரான வாக்குப்பலத்தினை காலத்தின் தேவை கருதி பயன்படுத்த வேண்டியது தமிழனாக பிறந்த ஒவ்வொருவனுடைய கட்டாய கடமையாகும் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்த நாட்டிலே எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருககும் ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் மக்களின் வாக்குப்பலத்தின் பெறுமதியினை இந்த பேரினவாதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் அப்போதூன்எமது பலம் என்னஎன்று அவர்களுக்கு புரியும்.
ஏனனில் இந்த நாட்டில் உள்ள தமிழர்களது வாக்கு எங்களுக்கு தேவையில்லை அது இல்லாமலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என மேடைகளிலே முழங்குகின்றார்கள் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுமாக இருந்தால் நிட்சயம் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் இம்முறை வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் நாங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும்.
அந்த ஆட்சி மாற்றத்தில் தமிழர்களது பலம் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதனை ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் உணர்ந்து எங்களது பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கதயாராகும் இதற்கு சர்வதேசமும் எமக்கு உந்து சக்தியாக இருக்கும்.
எனவே வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி எமது தலமையின் தீர்க்க தரிசனமான வழிகாட்டலுக்கு அமைவாக கட்டாயமாக வாக்குச்சாவடிக்குச்சென்று வாக்களித்து தமிழர் பலத்தினை நிரூபிப்பதன் மூலம் தன்மானத் தமிழர்களது பலம் எவ்வாறு உள்ளது என்பதனை இந்த பேரினவாதக்கட்சிகள் உணர்ந்து எமக்கான தீர்வினை தருவதற்கு முன்வரவேண்டும் எனவும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblu3.html

Geen opmerkingen:

Een reactie posten