தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை ஜனவரி 15 அமுலுக்கு வருகிறது!

அதிகாரிகள் தப்பிச் செல்ல தடை வேண்டும்!- பொது எதிரணி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:39.57 AM GMT ]
எதிர்வரும் வாரத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்லாதிருக்க வழிசெய்ய வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோருவதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொது எதிரணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
சில அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிரணியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டவர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜித எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmtyBTYKbluz.html#sthash.YS2W89d8.dpuf

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் இறக்குமதி தடை ஜனவரி 15 அமுலுக்கு வருகிறது!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 12:44.16 AM GMT ]
எதிர்வரும் 15ம் திகதியின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ஏற்றுமதி தடை அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிலைமையை சமாளிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் சரத்குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் காரணமாகவே இந்த தடை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்;கையின் மீன்பிடித்துறையை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இதற்கு அமைய 12 ரஷ்ய நிறுவனங்கள் இலங்கை மீன்களை கொள்வனவுசெய்ய இணங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்வதேச கடற்பரப்பின் சட்டங்களை இலங்கை மீறியதாக குற்றம் சுமத்தியே ஐரோப்பிய ஒன்றியம் இந்த தடை ஏற்பாட்டை மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmtyBTYKblu0.html#sthash.XxWbV8gi.dpuf

Geen opmerkingen:

Een reactie posten