தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

கூட்டமைப்புக்கு பிச்சைக்காரனின் புண்ணைப்போல இனப்பிரச்சினை!- செய்தியாளர்களிடம் ஜனாதிபதி செவ்வி

எதிரணியில் இருப்பவர்கள் வேலை செய்ய தெரியாதவர்கள்: சரத் அமுனுகம
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:25.12 AM GMT ]
நல்லாட்சியை கொண்டு வர போவதாக கூறி வேலை செய்ய தெரியாதவர்களே எதிர்க்கட்சியில் இணைந்திருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் தோல்வியடைவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வறுமையில் இருப்பவர்களை செல்வந்தர்களாக மாற்றவே நாங்கள் இவை அனைத்தும் செய்து வருகிறோம்.
வறுமையை ஒழித்து வறியவர்களை உயர்த்துவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கப்பட்டது. சிறப்புரிமைகள் இல்லாதவர்களே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி வந்து சுதந்திரக் கட்சியை உருவாக்கினர்.
கிராமத்தில் இருக்கும் வறிய மக்கள் மீது அன்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மாத்திரமே இருக்கிறது எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw0.html
ரணிலிடம் இருந்து மகிந்தவுக்கு அழைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:28.56 AM GMT ]
எதிர்காலத்தில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தில் இணைந்து செயற்பட வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல், சிவில் சமூகம் என அனைத்து தரப்பினரும் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒரே மேடையில் இணைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருணாகல் மாவட்டம் தொடங்கஸ்லந்த மற்றும் மாவத்தகம ஆகிய தேர்தல் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தர் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw1.html
கூட்டமைப்புக்கு பிச்சைக்காரனின் புண்ணைப்போல இனப்பிரச்சினை!- செய்தியாளர்களிடம் ஜனாதிபதி செவ்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:38.25 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இனப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணாமல் பிச்­சைக்­கா­ரனின் புண்ணைப் போல் வைத்­துக் ­கொண்டு அர­சியல் நடத்­து­வ­தி­லேயே நாட்டம் காட்டி வரு­கின்­றது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவர்கள் உள்­ளூரில் பிரச்­சி­னைக்கு தீர்வு காணாமல் அமெ­ரிக்கா, ஜெனீவா ஆகிய நாடு­க­ளி­லேயே தீர்வை தேடி ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு நான் தீர்வைப் பெற்­றுக்­கொ­டுப்பேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மாட்­டார்கள்.
தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு காண பாரா­ளு­மன்றத் தெரிவுக் குழு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. என்னால் மாத்­திரம் ஒரு தலைப்­பட்­ச­மாக தீர்வு வழங்­கு­வது சாத­க­மாக இருக்­காது.
13வது அர­சி­ய­ ல­மைப்புத் திருத்தச் சட்டம் பாரா­ளு­மன்­றத்­துக்கும் அமைச்­ச­ர­வைக்கும் கூட முன்­வைக்­கப்­ப­டாமல் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது என்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச கடந்த புதன்­கி­ழமை அலரி மாளி­கையில் வாராந்த பத்­தி­ரி­கை­களின் செய்­தி­யா­ளர்­களுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவ­ரது செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது,
கேள்வி:–  இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கடும் போட்டி நில­வு­வ­தாக நீங்கள் கரு­து­கின்­றீர்­களா?
பதில்:–  எனக்கு இத்­தேர்­தலில் போட்­டியே இல்லை. கொழும்பு மாவட்­டத்தில் மாத்­திரம் போட்­டியை எதிர்­நோக்­கு­கின்றேன். ஆனால் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் கிராம பிர­தே­சங்­க­ளிலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு ஆத­ர­வான அலை வீசிக்­கொண்­டி­ருக்­கி­றது.
கேள்வி:–  யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் அபி­வி­ருத்தி பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால், வாழ்க்கைச் செலவு குறை­ய­வில்லை. இதற்­கான காரணம் என்ன?
பதில்:–  யுத்தம் பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்­துள்­ளது. கடந்த 4 வரு­டங்­க­ளாக அபி­வி­ருத்­திக்கு அடிப்­ப­டை­யான அடித்­தள அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேம்­ப­டுத்தி வரு­கின்றோம். கல்வி முறையில் முன்­னேற்றம் காணப்­பட்­டுள்­ளது. சிறந்த நிர்­வாகம் காணப்­ப­டு­கின்­றது. சட்­டத்­துறை சீர­ழிந்­துள்­ள­தாக எதி­ர­ணி­யினர் குற்­றஞ்­சு­மத்­து­கின்­றனர். ஆனால், அதில் உண்­மை­யில்லை.
கேள்வி:–  அமைச்­ச­ர­வையில் அமைச்­சர்கள் சுதந்­தி­ர­மாக தமது கருத்­துக்­களை வெளி­யிட முடி­யா­துள்­ள­தாக குற்­றஞ்­சு­மத்­தப்­ப­டு­கின்­றது. அர­சி­லி­ருந்து வெளி­யேறி பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இது குறித்து மேடை­களில் பேசி வரு­கின்றார். இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்:– சுகா­தார அமைச்சு சார்பில் அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவை பத்­தி­ரங்கள் பல தட­வைகள் வாபஸ் பெறப்­பட்­டன. இது குறித்து நான் மூன்று தடவை எச்­ச­ரிக்கை விடுத்தேன். அமைச்­ச­ர­வையில் அமைச்­சர்­க­ளான வாசு­தேவ நாண­யக்­கார, டியூ­ கு­ண­சே­கர, விமல் வீர­வன்ச, ஆகியோர் ஒழிவு மறை­வின்றி பகி­ரங்­க­மாக பேசுவர்.
கேள்வி:– அமைச்­சர்­க­ளுக்கு சுதந்­திரம் இல்­லை­யென குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் உங்கள் சகோ­ த­ரர்கள் தான் முக்­கிய முடி­வு­களை எடுப்­ப­தா­கவும் எதி­ரணி மேடை­களில் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றதே?
பதில்:– அப்­ப­டி­யொன்றும் இல்லை. நான் அமைச்­சர்­க­ளுக்கு அள­வுக்கு அதி­க­மாக சுதந்­திரம் வழங்­கினேன். அதுதான் பிரச்­சினை. முன்னாள் அமைச்சர் 37 மருந்து வகை­க­ளுக்கு இறக்­கு­ம­திக்­கான அனு­ம­தியை வழங்­கி­யுள்ளார். இந்த மருந்து வகை­களின் தரம் குறித்து ஆராய்ந்து தரச் சான்­றிதழ் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்த தரச் சான்­றி­தழை பெறு­வ­தற்கு சுமார் ஒரு வருட காலம் சென்­றி­ருக்கும். ஆனால், இந்த மருந்து வகை­க­ளுக்கு உட­ன­டி­யாக இறக்­கு­மதி அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
கேள்வி:–  அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்து சென்று ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­பவர் உட்­பட ஏனைய அமைச்­சர்கள் எம்.பிக்கள் ஜனா­தி­பதித் தேர்­தலில் நீங்கள் வெற்றி பெற்ற பின்னர் அரசில் இணை­வ­தற்கு மீண்டும் வந்தால் சேர்த்­துக்­கொள்­வீர்­களா?
பதில்:–  அந்தத் துரோ­கி­களை ஒரு போதும் எனது அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொள்ள மாட்டேன்.
கேள்வி:–  நாட்டின் பல பகு­தி­களில் ஜனா­தி­ப­திக்­கான மாளி­கைகள் பெருந்­தொகை பணச் செலவில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தாக எதி­ர­ணி­யினர் குற்­றஞ்­சு­மத்­து­கின்­றனர். நாட்டின் இன்­றுள்ள பொரு­ளா­தார நிலையில் இது தேவை­யற்­றது என விமர்ச­னமும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­ப­திக்கு பெருந்­தொகை நிதி வரவு –- செலவுத் திட்­டத்தில் ஒதுக்­கப்­ப­டு­கி­றது எனவும் கூறப்­ப­டு­கின்­றது. இதன் உண்மைத் தன்மை என்ன?
பதில்:–  நான் புதி­தாக எந்­த­வொரு ஜனா­தி­பதி மாளி­கை­யையும் நிர்­மா­ணிக்­க­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி பிரே­ம­தாஸ எம்­பி­லிப்­பிட்­டிய, யாழ்ப்­பாணம், பதுளை மற்றும் மஹி­யங்­கனை போன்ற பகு­தி­களில் ஏற்­க­னவே ஜனா­தி­ப­திக்­கான மாளி­கை­களை நிர்­மா­ணித்­தி­ருந்தார்.
நான் அவற்றை புதுப்­பித்தேன். இவை­ய­னைத்தும் அரச சொத்­துக்கள். இவற்றை அழிந்து போக­வி­டாமல் புன­ர­மைப்­பது எமது கடமை. (ஜனா­தி­ப­தியின் கீழுள்ள நிறு­வ­னங்கள் மற்றும் ஜனா­தி­பதி மாளி­கைகள் போன்­ற­வற்றை புன­ர­மைக்­கவும் இங்கு பணி­யாற்றும் ஊழி­யர்­க­ளுக்கு வேதனம் வழங்­க­வுமே பெரு­ம­ளவு நிதி செல­வி­டப்­ப­டு­கின்­றது.)
சிலர் அன்­ன­தானம் வழங்­கு­வ­தற்­காக இந்த நிதி செல­வி­டப்­ப­டு­வ­தாக கூறலாம். ஆனால், அதில் உண்மை இல்லை. எமது வீடு­க­ளுக்கு யாரா­வது வந்தால் அவர்­க­ளுக்கு உணவு வழங்­கு­வது எமது பாரம்­ப­ரிய வழக்­க­மாகும். இதில் தவ­றொன்­று­மில்லை என்றே நான் நினைக்­கின்றேன்.
கேள்வி:–  தான் 75 சத­வீ­த­மான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தி­ருந்தேன் என்று முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­விக்­கின்றார். இது உண்­மையா?
பதில்:– நாட்டு மக்கள் உண்­மையை அறிவர்.
கேள்வி:–  யுத்­தத்தின் இறுதி கட்­டத்தில் தான் பதில் பாது­காப்பு அமைச்­ச­ராக கட­மை­யாற்­றி­ய­தாக எதி­ர­ணியின் பொது வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­விக்­கின்­றாரே?
பதில்:–  கனவில்....
கேள்வி:–  சுதந்­தி­ர­மான ஆணைக்­கு­ழுக்கள் ஒழிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் நாட்டில் முறை­யான நிர்­வாகம் இடம்­பெ­ற­வில்லை என குற்­றஞ்­சு­மத்­தப்­ப­டு­கின்­றதே?
பதில்:–  நாட்டில் அப்­ப­டி­யொன்றும் இருந்­த­தில்லை. அதை யார் நிய­மித்­தது. ஆணைக்­கு­ழுக்கள் எப்­போ­து­மில்­லா­த­வாறு இப்­போது தான் சுதந்­தி­ர­மாக இயங்கி வரு­கின்­றன.
கேள்வி:–  சிறு­பான்மை கட்­சிகள் அர­சாங்­கத்தை விட்டு விலகி எதி­ர­ணிக்கு ஆத­ர­வ­ளிக்­கின்­றனர். இறு­தி­யாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அர­சி­­லி­ருந்து விலகி எதி­ர­ணிக்கு ஆத­ர­வ­ளிக்கின்றது. ஏன் இந்த நிலை?
பதில்:–  கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்­கென தனி­யான வலயம் வழங்க முடி­யாது. இவ்­வாறு தமி­ழர்­க­ளுக்­கொரு வலயம், முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுக்­கென தனித்­த­னி­யான வல­யங்­களை பிரித்து கொடுத்தால் நாடு துண்­டா­டப்­பட்­டு­விடும். எனவே நான் இதற்கு ஒரு­போதும் அனு­ம­தியேன். இந்தப் பிரச்­சி­னையால் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்தை விட்டு விலகி எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்குகின்­றனர்.
கேள்வி:–  அர­சாங்க தொலைக்­காட்சி சேவைகள் பக்­க­ச்சார்­பாக ஐ.ம.சு.முன்­ன­ணிக்கு மட்டும் பிர­சாரம் மேற்­கொள்­வ­தாக குற்­றஞ்­சு­மத்­தப்­ப­டு­கின்­றது. இது குறித்து நீங்கள் கவனம் செலுத்­த­வில்­லையா?
பதில்:–  நான் தொலைக்­காட்சி பார்க்­க­வில்லை. தொலைக்­காட்சி சேவைகள் பக்­க­ச்சார்­பின்றி சுதந்­தி­ர­மாக இயங்க வேண்­டு­மென்­பதே எனது நிலைப்­பா­டாகும். இது அரச தொலைக்­காட்­சி­க­ளுக்கு மட்­டு­மின்றி, தனியார் தொலைக்­காட்­சி­க­ளுக்கும் பொருந்தும்.
இப்­போது இரண்டு மூன்று அரச தொலைக்­காட்­சி­களை தவிர்ந்த ஏனைய அனைத்தும் தனியார் தொலைக்­காட்­சி­ களே. அதில் அர­சாங்­கத்தை கடு­மையாக விமர்­சிக்கும் தொலைக்­காட்­சி­களும் இருக்­கின்­றன. நான் ஒரு வேட்­பாளர் என்ற ரீதியில் தொலைக்­காட்சி, வானொலி சேவை­க­ளுக்கு நெறி­மு­றை­களை அமுல்­ப­டுத்த முடி­யாது.
கேள்வி:--  உங்­க­ளிடம் அமைச்­சர்­களின் கோப்­புக்கள் இருப்­ப­தா­கவும் அவை குறித்து நீங்கள் எது­வித நட­வ­டிக்கையும் எடுக்­க­வில்லை என்றும் குற்­றச்­சாட்டு விடுக்­கப்­பட்­டுள்­ளது. ஏன் கோப்­பு­களை விசா­ரணை செய்­யாமல் வைத்­தி­ருக்­கின்­றீர்கள்?
பதில்:–  அடுத்­த­வர்­களின் கோப்­புகள் என்­னிடம் இல்லை. சிலர் அமைச்­சர்கள் குறித்து குற்­றச்­சாட்­டு­களை எனக்கு அனுப்பி வைப்­பார்கள். அவற்றை நான் கோப்­பு­க­ளாக சேக­ரித்து வைத்­துள்ளேன். அவ்­வ­ளவு தான்.
கேள்வி:–  நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு டென்டர் கோரப்­ப­டு­வ­தில்லை. இதனால் இத்­திட்­டங்­களில் மோசடி இடம்­பெ­று­வ­தாக எதி­ர­ணி­யினர் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். உண்­மை­யி­லேயே அதி­வேக நெடுஞ்­சா­லைகள் போன்­ற­வற்­றுக்கு டென்டர் கோரப்­ப­டு­வ­தில்­லையா?
பதில்:–  இந்த அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­கான டென்­டர்கள் என்­னிடம் வரு­வ­தில்லை. இருந்தும் 1996ம் ஆண்­ட­ளவில் ஒரு திட்­டத்­துக்கு மதிப்­பீடு பெறப்­பட்டு 2014ம் ஆண்டு அதை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது அதன் மதிப்­பீடு பல மடங்கு அதி­க­ரிக்க வாய்ப்­புண்டு. அத்­துடன் இந்த அதி­வேக நெடுஞ்­சாலை திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது சுவீ­க­ரிக்­கப்­படும் தனியார் காணி­க­ளுக்கு அரச மதிப்­பீட்­டின்­படி நஷ்­ட­ஈடு வழங்­கப்­படும்.
ஆனால் சில காணி உரி­மை­யா­ளர்கள் அப்­போ­தைய சந்தை நிலை­வ­ரப்­படி தமது காணி­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கும்­படி கோரிக்கை விடுப்பர். அந்த நஷ்­ட­ஈட்டை வழங்கி அதி­வேக நெடுஞ்­சாலை திட்­டங்­களை முன்­னெ­டுக்­கும்­ போது அதற்­கான செலவு அதி­க­ரிக்­கவே செய்யும். அக்­கா­ணி­களை பலாத்கார­மாக எம்மால் சுவீ­க­ரிக்க முடி­யாது.
கேள்வி:–  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதி­ரணி பொது வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வதால் வட மாகா­ணத்தில் உங்­க­ளது வாக்­குகள் குறைய வாய்ப்­புக்கள் உள்­ளதா?
பதில்:-- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வது குறித்து நான் ஆச்­ச­ரி­யப்­ப­ட­வில்லை. கடந்த தேர்­தலில் வட மாகா­ணத்தில் எனக்கு 46,000 வாக்­குகள் மாத்­தி­ரமே கிடைத்­தன. ஆனால், இம்­முறை வாக்­குகள் அதி­க­ரிக்­கு­மென நான் நினைக்­கின்றேன்.
முதற் தட­வை­யாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் வட மாகாண சபைக்கு ஆர். அங்­கஜன் தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். முன்னாள் யாழ். மேயர் துரை­யப்பா வேறொரு கட்சி சார்பில் தெரிவு செய்­யப்­பட்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இணைந்­து­கொண்டார். தற்­போது பலர் அங்­கி­ருந்து என்­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு பேசு­கின்­றனர். வட­மா­கா­ணத்தில் எமது கட்­சிக்கு ஆதரவு பெரு­கி­வ­ரு­கின்­றது என்­பதை இது எடுத்­துக்­காட்­டு­கின்­றது.
கேள்வி:– மன்னார் ஆயர் எதி­ரணி வேட்­பா­ள­ருக்கு ஆத­ர­வாக கருத்து தெரி­வித்­துள்ளார். இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்?
பதில்:–  என்­னிடம் கிடைக்­கா­ததை பொது வேட்­பா­ள­ரிடம் பெற்­றுக்­கொள்ள முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது என்றே கருத வேண்­டி­யுள்­ளது.
கேள்வி:– இந்­தி­யாவின் பிர­பல நடிகர் சல்மான் கான் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சா­ரங்­க­ளுக்­காக இலங்­கைக்கு அழைத்து வ­ரப்­பட்­டாரா?
பதில்:–  அவர் எனது பிர­சா­ரத்­திற்­காக இலங்கை வர­வில்லை. தனிப்­பட்ட கார­ணங்­க­ளுக்­காக சுற்­றுலா விசா பெற்று இங்கு வந்­துள்ளார். அவர் சில தினங்­க­ளுக்கு முன்னர் மருத்­துவ முகா­மொன்­றையும் நடத்­தினார். அதில் இல­வச மூக்கு கண்­ணாடி மற்றும் இல­வச மருத்­துவ சேவைகள் வழங்­கப்­பட்­டன.
அர­சாங்கம் சல்மான்கானுக்­காக ஒரு சத­மேனும் செலவி­ட­வில்லை. 700மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­ட­தாக எதி­ர­ணி­யினர் குற்­றஞ்­சு­மத்­து­கின்­றனர். இதில் சிறி­த­ளவும் உண்­மை­யில்லை.
கேள்வி:–   உள்ளூர் கலை­ஞர்கள் இப்­போது உங்­க­ளுக்கு ஆத­ர­வாக செயற்­ப­ட­வில்­லையா?
பதில்:–  அவர்கள் எப்­போதும் என்­னு­ட­னேயே இருக்­கின்­றனர். "வன் சொட்" ரஞ்சன் போன்ற சிலர் மாத்திரமே எதிரணியில் இருக்கின்றனர்.
கேள்வி:–-- குருணாகலை, கும்புக்கெட்ட என்ற இடத்தில் வீதி நாடக கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்?
பதில்:–   இந்த தாக்குதல் சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இது குறித்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும்படி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
கேள்வி:–-- அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையே ஏன்?
பதில்:–- முறையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன் பிரதியமைச்சரொருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதேபோல் அமைச்சர்களின் புதல்வர்களும் ஒரு தாக்குதல் சம்
பவத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததையும் இங்கு நினைவு கூரவேண்டும்.
ஐ.தே.கட்சி காலத்தில் ஆணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைகளுக்கு எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. சிலர் ஆளுங்கட்சியில் இருக்கும் போது கொலை சம்பவங்களில் ஈடுபடுவதுண்டு. ஆனால், எதிர ணிக்கு மாறியதுடன் புனிதர்களாக மாறி விடுகின்றனர்.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw2.html

Geen opmerkingen:

Een reactie posten