தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

காவி உடையில் இராணுவம்!- தேசிய பிக்குகள் சம்மேளனம் குற்றச்சாட்டு

எதிரணி கொழும்பில் மாத்திரமே வெற்றி பெறப்போவதாக பேசப்படுகிறது! தேர்தலை கேலியாக கருத வேண்டாம்!: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 04:09.05 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றிப்பெறும் என்று கொழும்பில் மாத்திரமே பேசப்படுகிறது ஏனைய பிரதேசங்களில் தமக்கு எவ்வித சவால்களும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 17வது அரசியல் அமைப்பு சரத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களை 18வது அரசியலமைப்பு சரத்து இல்லாமல் செய்துவிட்டது என்று கருத்தை மஹிந்த ராஜபக்ச மறுத்தார்.
குறித்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் ஒருபோதும் தாம் தலையிடுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரச ஊடகங்கள் தமக்கு பிரசாரம் செய்வதாக கூறப்பட்டாலும் அவற்றை தாம் பார்ப்பதில்லை.
அதேநேரம் ஏனைய ஊடகங்கள் டொலர்களுக்காக எதிரணியினருக்காக சேவையாற்றுவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலை கேலியாக கருத வேண்டாம்: மகிந்த ராஜபக்ஷ
ஜனாதிபதி தேர்தலை சிலர் நகைப்புக்குட்படுத்தியுள்ளதாக, கினிகத்தேனை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியை வெற்றி செய்யும் முகமாக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றுகையில்,
இவர்கள் நாளாந்தம் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர். அண்மையில் இரவு வேளையில் கற்பிரயோகங்கள் நடத்தப்பட்டன. இரண்டு கற்களை வீசியுள்ளனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நாங்கள் கற்களை வீசினால் சரியாக வீசுவோம். மேடையில் கல் ஒன்று விழுந்துள்ளது. இன்னும் சில தினகங்களில் என்ன செய்வார்கள் என தெரியவில்லை. இது ஜனாதிபதி தேர்தல் நகைக்கதக்க விடயம் அல்ல. இதனால் இதனை நகைப்புக்குட்படுத்த வேண்டாம் என எமது முன்னால் செயலாளரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு சகல சூழ்ச்சிகளையும் தோல்வியடைய செய்து எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் பொய் பிரசாரங்கள் முன்எடுக்கப்படுகின்றன. கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யும் போது வெற்று இருக்கைகள் வைக்கப்படுகின்றன. அந்த வெற்று இருக்கைகள் அமர பெரியவர்கள் வர இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.
இதனையே ஜனவரி எட்டாம் திகதி கூறுவார்கள். இதனால் மக்களாகிய நீங்கள் பொய் பிரசாரங்களை நம்பாமல் சிந்தித்து செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblv1.html
சகலரும் கௌரவமான முறையில் தொழில் புரியும் நாட்டை நாமே உருவாக்கினோம்: ஜனாதிபதி மஹிந்த
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 05:29.34 AM GMT ]
சகல தொழில் துறையினரும் தமது தொழிலை கௌரவமான முறையில் செய்ய கூடிய நாட்டை இன்றைய அரசாங்கமே கட்டியெழுப்பியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழில் துறையினர் மத்தியில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்கள், பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள், வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட தொழில் துறையினர் நேற்று இரத்தினபுரியில் ஜனாதிபதியை சந்தித்தனர்.
நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு தாம் பரிபூரண ஆதரவை வழங்குவதாக அவர்கள் கூறியதாக ஜனாதிபதியின் தேர்தல் பிரசார காரியாலயம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblv2.html
பொலிஸ் வேடத்தில் கொள்ளையிட்டவர்கள் கொச்சிக்கடையில் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 05:36.13 AM GMT ]
பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை கொள்ளையிட்டு வந்த நான்கு பேர் கொச்சிக்கடை, தளுவகொட்டுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொச்சிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் மேற்கொள்ள கொள்ளை சம்பவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
பன்னல, நீர்கொழும்பு, தங்கொட்டுவ, கொட்டுகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 24, 28 மற்றும் 32 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblv3.html
பொலன்னறுவைக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 06:11.04 AM GMT ]
மைத்திரிபால சிரிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன கலந்து கொண்ட அரலகங்வில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தினை அடுத்து குறிப்பாக அரலகங்வில பகுதிக்கும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையாளர் பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் சிறிய விடயங்கள் என்றும், அவற்றை பெரிதுபடுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblv5.html
காவி உடையில் இராணுவம்!- தேசிய பிக்குகள் சம்மேளனம் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:12.54 AM GMT ]
அரசு இராணுவத்தினருக்கு காவி உடை அணிவித்து மதத்தலங்ககள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அந்த பழியை பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிக்கும் பிக்குகள் மீது சுமத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக தேசிய பிக்குகள் சங்க சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக கொழும்பைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் வடக்கில் அமைந்துள்ள மதத்தலங்களை தாக்கி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பிக்குகள் மீது பழிசுமத்தும் திட்டம் அரசிடம் இருப்பதாகவும் இதற்கு காவி உடை அணிந்த இராணுவத்தை பயன்படுத்தவிருப்பதாகவும் இந்த சம்மேளனம் மேலும் கூறுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblwz.html

Geen opmerkingen:

Een reactie posten