[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:45.42 AM GMT ]
இவரை பலாலி விமான நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வரவேற்றுள்ளார்.
அத்துடன் கட்டளை தளபதி ஜகத் அல்விஸ்ஸினுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்..
மேலும் யாழ்ப்பாணத்தில் முக்கிய இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ள நாமல் ராஜபக்ச ஊடக மாநாடு ஒன்றையும் நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இளைஞர்களை சந்திக்கவுள்ளதாகவும், இதற்கான சகல ஏற்பாடுகளையும் அங்கஜன் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
தேர்தல் விதியை மீறினார் ஜனாதிபதியின் புதல்வர்!
தேர்தல் விதிமுறைகளை மீறி இன்று பண்டத்தரிப்பு பல்லசுட்டியில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த இருபது குடும்பங்களுக்கு இராணுவம் அமைத்து கொடுத்த வீடுகளை இன்று நாமல் ராஜபக்ச கையளித்தார்.
இத தேர்தல் சட்ட விதிமுறைக்கு முரணானதென்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw3.html
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சாரி அணிந்து கொள்ளட்டும்! ஹிருணிக்கா கிண்டல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 07:58.59 AM GMT ]
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியொன்றில் நடைபெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
ராஜபக்சவினரின் ஆட்சியில் பொலிசாரின் மரியாதை தரம் தாழ்ந்திருப்பதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசாங்கத்தின் அழுக்குகளை கழுவும் வேலையை பொறுப்பெடுத்திருப்பதாகவும் ஹிருணிக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் போதை மருந்து விற்பனை தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அவ்வாறான இடங்கள் குறித்து ஹிருணிக்கா தகவல் அளித்தால் அந்த இடங்களை முற்றுகையிட்டு சோதனை நடத்த தாம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த ஹிருணிக்கா,
எனது சாரியை நான் பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு தரத் தயாராக இருக்கிறேன். அவர் இதை அணிந்து கொண்டு மூலையில் ஒதுங்கிக் கொள்ளட்டும். அதற்குப் பதிலாக அவரது பொலிஸ் சீருடையை எனக்குத் தந்தால் அதனை அணிந்து கொண்டு நான் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காக செல்லவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw4.html
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பொதுபல சேனாவே காரணம்!- அமைச்சர் வாசுதேவ தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 08:09.32 AM GMT ]
இன்று தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது மேற்கண்ட கருத்தை வலியுறுத்தியுள்ள அவர், பொது பல சேனா அமைப்பு தமிழ், முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அவ்வாறான ஒரு அமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்வந்ததையடுத்து, அரசாங்கத்தின் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருந்த அரசாங்கத்தின் ஆதரவுத் தளம் முற்றாக சிதைந்து போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வன்முறைகளுக்கு ஆதரவளிக்கும், வன்முறைகளில் ஈடுபடும் யாரையும் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw5.html
Geen opmerkingen:
Een reactie posten