உல்லாசம் அனுபவித்த படைச்சிப்பாய் அகப்பட்டார்….
இந்த படைச்சிப்பாய்க்கு பேரூந்து பயணத்தின்போது ஒரு யுவதி அறிமுகமாகி, காதல் வசப்பட்டுள்ளார். பெலவத்த – கொழும்பு இடையிலான தனியார் பஸ் ஒன்றில் தினமும் வேலைக்குச் செல்லும் இந்த யுவதி, படைச்சிப்பாயின் காதல்வலையில் வீழ்ந்துள்ளார். அவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார். பின்னர், தனது மூன்று நண்பர்களையும் யுவதியை சீரழிக்க அனுமதித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னர் யுவதி செய்த முறைப்பாட்டையடுத்து நால்வரும் கைதாகியுள்ளனர் என அறியப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/95291.html
விசாரணைக்குத் தயாராகும் மனித உரிமைகள் ஆணையாளர்….
இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறிலங்காவில் விசாரணை நடத்தி இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பந்தமான முழுமையான ஆய்வை உள்ளடக்கி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95300.html
வீரவன்சவின் மனைவியின் நிலை….
ஏற்கனவே கடவுச்சீட்டை வைத்திருந்த நிலையிலேயே அவர் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்தரமுல்லயை சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன,
குறிப்பிட்ட நபர் தனது முறைப்பாட்டில் சசியிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் உள்ளதாக தனக்கு தகவல்கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சுசி வேறுவேறு பிறந்த திகதிகளுடன் ,வேறுவேறு தேசிய அடையாள அட்டை இலக்கங்களுடன் கடவுச்சீட்டுகளை வைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ள அந்த நபர் தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையில் தலையிடமாட்டேன் மைத்திரி
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உள்ள நியாயங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் மாகாண சபைகளின் விடயங்களில் நான் தலையிட விரும்பவில்லை. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிகள் தமக்குள் இணக்கப்பாட்டுக்கு வருவதையே நான் விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் முன்னர் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை தொடரவே தான் விரும்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணில் ஆபத்தானவர்! நாம் கவனமாக இருக்க வேண்டும்! சிறீதரன்
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்கள் தேசிய இனத்தவர்கள். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல. எங்களில் பலருக்கு இது தொடர்பில் மயக்கங்கள் உள்ளது. ஆகவே மயக்கத்தில் இருந்து தெளிய வேண்டும்.
தமிழினம், சுயநிர்ணய உரிமைக்காக இன்று நேற்று அல்ல 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்ற ஒரு இனமாகும்.
சுயநிர்ணய உரிமையை கேட்பதற்கு நாங்கள் வரலாற்று ரீதியான ஒரு நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும். அவ் நிலப்பரப்பை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழி, கலாசாரம் என்பவற்றையும் நாம் பேணிவந்துள்ளோம்.
மஹிந்த சிந்தனையை தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு வீடுவதற்கான காலம் வேண்டும். பேச்சுச் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களைச் சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும்.
ரணில் நல்லது செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது, இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சினையில் கவனம் செலுத்துவார்கள் என்பதையே நோக்கவேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார். அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர்.- என்றார்.
http://www.jvpnews.com/srilanka/95312.html
Geen opmerkingen:
Een reactie posten