பிரகீத் காணாமல் போய் 5 வருடங்கள்....
|
இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமான பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.
இவர் இலங்கை அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனார்.
இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது[4].
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி "போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்' என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.
எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
பிரகீத் எக்னெலிகொடவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே கடத்தி வைத்திருக்கின்றார் என்று அவரின் மனைவியான சந்தியா எக்னெலிகொட குற்றஞ்சாட்டி பிரகீத் எக்னெலிகொடவை விடுவிக்கக் கோரி அண்மையில் அலரி மாளிகைக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.
எவ்வாறாயினும் பிரகீத்தை காணாமல் போகச் செய்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசும் அதே காலத்தில் காணாமல் போகும் நிகழ்வும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. பிரகீத் இன்னமும் திரும்பவில்லை. |
24 Jan 2015
|
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422124716&archive=&start_from=&ucat=1&
இராஜதந்திரிகள் 29பேருக்கு அழைப்பு
|
அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகள் 29பேரை உடனடியாக நாட்டுக்கு திரும்புமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.அரசியல் நியமனம் பெற்ற இராஜதந்திரிகளை நாட்டுக்கு அழைக்கும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இது, அரசாங்கம் மாறும்போது இடம்பெறும் வழக்கமான நிகழ்வு என அவர் தெரிவித்தார். அரசியல் செல்வாக்கு மூலம் நியமிக்கப்பட்ட மற்றும் ஒரே நிலையத்தில் நீண்டகாலமாக கடமையாற்றும் இராஜதந்திரிகள் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
|
24 Jan 2015 http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422125104&archive=&start_from=&ucat=1& |
"13 +" வேண்டாம் இந்தியா தெரிவிப்பு
|
13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று எந்த தீர்வினையும் வழங்க வேண்டாம் என்று, இந்தியா கோரி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, இந்த விடயம் தொடர்பில் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயத்துக்குத் தமிழ்த் தரப்பினரும் இணக்கம் வெளியிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். |
24 Jan 2015
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1422123954&archive=&start_from=&ucat=1&
|
Geen opmerkingen:
Een reactie posten