தேர்தலில் இராணுவத் தலையீடு…. கண்காணிப்பாளர்கள் கவலை!
இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள கொமன்வெல்த் கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் கலாநிதி பாரத் ஜக்டியோ, “தேர்தல் நாளன்றோ, அதற்கு முதல் நாளோ, இராணுவம் பயன்படுத்தப்படுவது குறித்த முக்கியமான கவலை உள்ளது. தேவை எனக் கருதினால், இதுகுறித்து விவாதிக்க இராணுவத்துடன் ஒரு சந்திப்பைக் கோருவோம்.
அரசாங்க வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது, வன்முறைகள், முறைகேடுகள் குறித்தும் எமக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் கண்காணிப்பாளர்கள் ஒன்பது பேர், சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழுவும், அரச வளங்களின் துஸ்பிரயோகம், காவல்துறை செயற்திறனற்றிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ளது.
தமது கலந்துரையாடல்களில் முக்கியமாக அரச வளங்களின் துஸ்பிரயோகம், காவல்துறையின் பாகுபாடான செயற்பாடுகள் குறித்து கவலை எழுப்பப்பட்டதாக, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளரும், தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்துள்ளவருமான எஸ்.வை.குரேசி தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92813.html
வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் களத்தில்….
இதையடுத்து தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புறப்பட்டுச் சென்றனர். வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவில் இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் குரேசியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



http://www.jvpnews.com/srilanka/92816.html
Geen opmerkingen:
Een reactie posten