தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

மகிந்த என்ற முள்ளை மைத்திரி என்ற முள்ளாலேயே எடுக்க வேண்டும்: மாவை - அனந்தி முரன்பாடு !

வடக்கு கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ஞானம் உதவி !

[ Jan 05, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 14326 ]
வடக்கு கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் குடும்பங்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி. இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்கள், என அறியப்படுகிறது. நாட்டின் பல மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரண உதவிப் பொருட்களுடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட வாகனத் தொடரணி குறித்த மாவட்டங்களைச் சென்றடைந்துள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, மன்னார், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய எட்டு மாவட்டங்களில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த 20 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண உதவிப் பொருட்கள் நாளை காலை முதல் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பதப்படுத்தப்பட்ட மீன், பால்மா, பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா அடங்கலான உலர் உணவுப் பொதியொன்றும்,
சவர்க்காரம், பற்பசை, நுளம்புச் சுருள்கள், டெட்டோல,; பவுடர், சீப்பு மற்றும் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சுகாதாரப் பொதியொன்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை
விரிப்புக்கள், துவாய் மற்றும் நுளம்பு வலை ஆகிய அத்தியாவசியப் பொருட்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியேற்பட்டதுடன், தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது. மேலும், மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலும் கிட்டங்கி வீதி உட்பட பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியதுடன், பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும், பொது மண்டபங்களிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்திலும் வெள்ளம் காரணமாக பலர் வீடுகளை விட்டு வெளியேறி இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்க நேரிட்டது.
கந்தளாய் - சேருவில மற்றும் திருகோணமலை - மட்டக்களப்பு ஆகிய வீதிகள் வெள்ளப்பெருக்கினால் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், கந்தளாய் குளத்தின் 10 வான்கதவுகளும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.குறித்த எட்டு மாவட்டங்களிலும் அண்மையில்; ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பல்வேறு இடர்களைச் சந்திக்க நேர்ந்ததுடன், பல குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் பல நாட்கள் தங்க நேரிட்டது. அவர்களின் துயர் துடைக்கும் வகையிலேயே லைக்கா ஞானம் அறக்கட்டளை நிவாரண உதவிப் பொருட்களை வழங்குவதற்கு தீர்மானித்தது. லைக்கா மொபைல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா, பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த வெள்ள நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இதற்கு முன்னரும் மக்களுக்கு தேவையேற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இலங்கையின் 8 மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ள லைக்கா ஞானம் அறக்கட்டளை, இதுவரை சுமார் 3 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியிலான உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1795.html

காலியாக இருக்கும் 10 அமைச்சர்களை நிரப்ப கூட வழியில்லாமல் மகிந்த அலைந்து திரிகிறார் !

[ Jan 05, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 4350 ]
ஆளும் கட்சி அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் எதிரணிக்கு தாவியதால் ஐந்து அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் ஐந்து பிரதியமைச்சுப் பதவிகளும் காலியாக இருக்கின்றன. ரவூப் ஹக்கீம் எதிரணிக்கு மாறியதால் நீதி அமைச்சும் பஷீர் சேகுதாவூத் விலகியதால் திறன் அபிவிருத்தி அமைச்சும் பாட்டாளி சம்பிக் ரணவக்க விலகியதால் தொழில் நுட்ப மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் நவீன் திசாநாயக்க பதவி விலகியதால் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சும் துமிந்த திசாநாயக பதவி விலகியதால் கல்விச் சேவைகள் அமைச்சும் அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் காலியாகவுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக களமிறங்கியதால் அவர் வகித்த சுகாதார அமைச்சு மாத்திரம் திஸ்ஸ அத்தநாயகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ராஜித சேனாரட்ன வகித்த மீன்பிடி நீரியல்வள அமைச்சுக்கு பதில் அமைச்சராக சரத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் எம்.ஜே.டி.எஸ். குணவர்தன நந்திமித்ர ஏக்கநாயக, பைஸர் முஸ்தபா, ப.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் வகித்த பிரதி அமைச்சுப் பதவிகளுக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை.
அமைச்சர்களை நியமிக்க கூட வழியில்லாமல் மகிந்தர் அலைந்து திரிவதாக கூறப்படுகிறது. இதேவேளை மகிந்தர் மிகவும் இலகுவாக கோபமடைவதாகவும், வாகனங்களில் அதிகம் செல்வதால் உளைச்சலுக்கு உள்ளாகி தனக்கு அருகில் உள்ள அனைவரையும் திட்டித் தீர்ப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோலவே யாழிலும் நடைபெற்று, பின்னர் யாழில் வேறு சில இடங்களுக்கு செல்லாமல் மகிந்த கொழும்பு திரும்பியதாகவும் செய்திகள் மேலும் கசிந்துள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1797.html

மேடைகளில் நக்கல் அடிப்பது போய் தற்போது தோல்வி என்னும் பயம் மகிந்தரை சூழ்ந்து கொண்டதா ?

[ Jan 05, 2015 05:35:52 AM | வாசித்தோர் : 6940 ]
பொதுவாக மேடைகளில் எதிர்கட்சி தொடர்பாக கிண்டலடித்து, நகைச்சுவையாக பேசி வந்த மகிந்த ராஜபக்ஷ தற்போது திடீரென மாறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இவருக்கு தோல்வி என்னும் பயம் வந்துவிட்டது என்று அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஸவிற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார உரைகள் மிகவும், ஆக்ரோசமான வகையில் அமைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்த்தரப்பினரின் செயற்பாடுகளை நகைச் சுவையுடன் விமர்சனம் செய்து வந்த மகிந்த, அண்மைய உரைகள், குரோத உணர்வு வெளிப்படும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தம்மை ஆதரிக்காத தரப்பினரை மறைமுகமாக எச்சரிக்கும் தோரணையில் மகிந்த, கருத்து வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா, முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித உள்ளிட்ட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் கடுமையான தொனியில் மகிந்த விமர்சனங்களை செய்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசியல் நாகரீகமற்ற முறையில் அமைந்துள்ளதோடு மக்களையும் வெறுப்படையச் செய்யும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை தவளைகள் எனவும், "அவள்", "இவள்" எனவும், "முட்டாள்" என்றும் ஏக வசனங்களை இவர் மேடைகளில் பேசிவருகிறார். தேர்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மகிந்தவின், முகத்தில் இருந்த ஒளி தற்போது குறைந்து, இருள் படர்ந்துள்ளதாக அரசியல் அவதானிகள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

http://www.athirvu.com/newsdetail/1799.html

விஸ்வமடுவில் கனகரத்தினத்தை மேடையில் இருந்து இழுத்து வீசிய தமிழ் இளைஞர்கள் !

[ Jan 05, 2015 05:47:18 AM | வாசித்தோர் : 14140 ]
பொல்லை கொடுத்து பொல்லால் அடி வாங்குவது என்று முதியவர்கள் சொல்வார்களே அது இதுதான் போல இருக்கிறது. நேற்றைய தினம்(04) முல்லைதீவு விசுவமடுப் பகுதியில் நமால் ராஜபக்ஷ ஒரு பிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். முன் நாள் போராளிகளை அதிகம் கொண்டுவரவேண்டும் என்று அவர் சிங்கள ராணுவத்திற்கு கட்டளை இட்டிருந்தாராம். இதனால் பல தமிழ் இளைஞர்கள் அங்கே கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். இன் நிலையில், பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை இளைஞர்கள் சேர்ந்து மேடையில் இருந்து இழுத்து விழுத்தியுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
விசுவமடுச் சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலர் அவரை பேசவிடாது மேடையிலிருந்து இழுத்து வீழ்த்தியுள்ளனர்.
அண்மையிலேயே கனகரத்தினம் முல்லைதீவு மாவட்ட சுதந்திரக்கட்சி(மகிந்தரின் கட்சி) அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மகிந்தரை வீழ்த்தவேண்டும் என்று முன் நாள் புலிகள் உறுப்பினர்கள் கூட குறியாக உள்ளார்கள். ஆனால் சில தமிழர்கள் தான் இன்னும் திருந்தவே இல்லை. உணர்ச்சி ஆரசியல் நடத்திவருகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1800.html

மகிந்த என்ற முள்ளை மைத்திரி என்ற முள்ளாலேயே எடுக்க வேண்டும்: மாவை - அனந்தி முரன்பாடு !

[ Jan 05, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 7890 ]
எந்த ஒரு நிகழ்விற்கும் ஒரு உள்ளார்ந்த தார்ப்பரிய மொழி பெயர்ப்புண்டு. இதனை புரிந்து கொண்டு உணர்ந்து கொண்டால் முரன்பாடுகளுக்கு இடம் இருக்காது.விடுதலை இயக்க அமைப்பான புலிகளுடன் ஒப்பிடும் போது, அரசியற் கட்சியான தமிழர் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளிடம் அர்ப்பணிப்பு இல்லையென்றே கூறலாம். விடுதலைப் புலிகளிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பும் கட்டுப்பாடும் ஏனைய தமிழ் இயக்கங்களிடையே, அன்றில் உலகில் வேறு எந்த அமைப்புக்களிடமோ காணப்பட்டதில்லை. அவ்வாறே கூட்டமைப்பின் தலைவர், மற்றும் திரு சுமந்திரன் போன்றோரிடமுள்ள புவிசார் அரசியல் நுன்னறி, சாணக்கியமும் இல்லை என்பது கசப்பான உண்மை.
இந்த நிலை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுடன் மோசமடைந்ததுடன், உலகுடனான புலிகளின் மேற்குலக தொடர்பு அறுந்தது என்றே கணிக்கலாம். இரத்தம் சிந்தாத ஈழத் தமிழ் தலைமைகளின் அரசியலும், புலிகளின் இரத்தம் சிந்திய போராட்டமும் அன்றே இனைந்திருந்தால் நாம் இன்று ஈழத்தில் இருந்திருப்போம். ஆம், வீரதீர தியாகத்துடன் அரசியல் ஞானமும் சாணக்கியமும் சேரவேண்டும். இதுதான் இன்றைய தமிழ்த்தாயின் தேவையாகும். இதனை இரு தரப்பினரும் புரிந்து ஏற்றுக்கொண்டால் முரன்பாட்டிற்கு இடமேது ? இன்று நடப்பது ஆயுதப் போரல்ல. எனவே எதி்ரியை பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் போன்ற களங்களிலேயே நாம் சந்திக்க இயலும். அதை எவ்வாறு வடிவமைப்பது என்பதற்கு சிந்தனை அவசியம் அல்லவா.
முழு உலகமுமே சேர்ந்து நமது போராட்டத்தை அழித்தன என்று கூறி நாம் தோல்விக்கு காரணம் கற்பிக்க இயலாது. முதலில் அவ்வாறு பேசுவதை நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும். அத்தோடு, மகிந்த போன்ற ஒரு உக்கிரமான தமிழ் இன அழி்ப்பாரை நாம் காணமுடியாது. மகிந்த என்ற கொடிய விஷ முள்ளை, மைத்திரி என்ற விஷ முள்ளால் தான் அகற்ற முடியும். இதுதான் அறிவு சார்ந்த உலக ஆயுதமாக தற்போது அமைந்துள்ளது. இதனை ஏற்க்க மறுத்தால், அரசியலில் நாம் அநாதைகளாக இருப்போம். யாருக்குமே வாக்களிக்க கூடாது என்று கூறுவதில் தவறுகள் உள்ளது. அவை யாதெனில், அதவது மகிந்தவை பதவியில் இருந்து நீக்க எமது கைவசம் உள்ள துருப்பு சீட்டான வாக்குகளை, நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பது, எமது வாக்குகளை நாமே நிராகரித்து மகிந்தரை வாழவைப்பதற்கு சமமாகும்.
இதில் நாம் ஒரு விடையத்தை நன்றாக கவனிக்கவேண்டும். மைத்திரி ஆட்சிக்கு வந்தால், சர்வதேச போர்குற்ற விசாரணையை தாம் கைவிடுவதாக ஐ.நா சொல்லியுள்ளதா என்ன ? அப்படி நடக்க வாய்புகளே இல்லை. அதனால் மைத்திரி ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது கூட ஐ.நா அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் சர்வதேச விசாரணைகளை நடத்த கோரிக்கை விடுக்கும். எனவே தற்போது சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சனை நீர்த்துப்போக வழியில்லை. மேலும் மகிந்தரை பதவியிறக்க சர்வதேசம், பாடுபட்டு வருகிறது. அதற்கு தமிழர்கள் துணை நின்றால் அவர்கள் தமிழர்களுக்கு செய்ய நினைக்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பார்கள். சர்வதேசத்தின் ஆதரவு ஈழத் தமிழர்களுக்கு பெருகும்நிலை உண்டாகும்.
எனவே உலகுடன் பகைத்து, மகிந்த வெல்ல வாய்ப்பளிக்கும் பகிஸ்கரிப்பை கைக்கொண்டு, உலகத்தொடர்பையும் அனுசரனையையும் இழந்து தமிழ் இனம் தனிமைப்படலாமா ? என்பதனை, தமிழ் வாக்காளர்களே தீர்மானிக்க வேண்டும். இன்றைய நிலையில் புலிகள் இருந்திருந்தால் அவர்களும் இதனையே முன்மொழிந்து இருந்திருப்பார்களா ? இந்த யதார்த்த நிலைமைகளை, திருமதி அனந்தி அடங்கலாக அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ளுதல் நல்லது. இன்றைய எமது தேவை உணர்ச்சி அரசியல் அல்ல. நாம் நன்றாக ஆழ்ந்து சிந்தித்து, பயன் தரக்கூடிய விடையங்களைச் செய்வதே ஆகும். இந்த தேர்தல் ஒன்றும் எமது உரிமைகளை பெற்றுத்தரப்போவது இல்லை. எமது வெற்றிக்கான தேர்தலும் அல்ல. ஆனால் இலங்கை அரசியல் சதுரங்கத்தில் சிங்கள ராஜவை விழ்த்த தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இது என்றே சொல்லலாம்.
http://www.athirvu.com/newsdetail/1796.html

Geen opmerkingen:

Een reactie posten