தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 januari 2015

அங்கஜன் அடியால் சந்திரிகாவிடம் டக்ளஸ்! கடுப்பான விஜயகலா….

நால்வரை படு கொலை செய்தவர் தற்கொலை….

கொலைக்காக சந்தேகநபர் பயன்படுத்திய கோடரியை கண்டுபிடிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
நீர்கொழும்பு தோப்பு பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பி பாலத்திலிருந்து மாஓயாவுக்குள் குதித்துள்ளார்.
சந்தேகநபர் தப்பித்துச் செல்ல மேற்கொண்ட முயற்சியின் போது அவரை தடுக்க முயன்ற குற்றப்புலனாய்வு திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நைனா மடம் பகுதியில் ஒரே குடும்த்தைச் சேர்ந்த நால்வரது சடலங்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் குழி ஒன்றில் போடப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டன. லுணுவில வைத்தியசாலையின் பெண் வைத்திய அதிகாரி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.


சடலமாக மீட்கப்பட்ட நால்வரதும் இறுதி கிரியைகள் வென்னப்புவ ரோமன் கத்தோலிக்க மயானத்தில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.VanapuvaVanapuva-01Vanapuva-02Vanapuva-03Vanapuva-04
http://www.jvpnews.com/srilanka/92758.html

இராணுவ நிலை நிறுத்தலில் கோதபாய….

இராணுவ தந்திரோபாயங்களுக்கு அமைவாகவே வடக்கில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். படையினர் நிலைநிறுத்தப்படுவது தொடர்பிலான தீர்மானங்களை அரசியல் ரீதியாக எடுக்க முடியாது எனவும், அவை நிபுணர்களினால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகளை வைத்துக்கொள்ள விருப்பமில்லை என்ற போதிலும், தந்திரோபாய காரணங்களுக்காக இவ்வாறு காணிகளில் படையினரை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வேறும் இடங்களில் படையினரை நிலைநிறுத்த முடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக வடக்கில் இவ்வாறு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தலைவர் பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திரு. பிரபாகரன் என அழைத்திருந்தார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92765.html

அசாத் சாலியின் பாதுகாப்பு பறிக்கப்பட்டுள்ளது….

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
மாகாணசபை உறுப்பினர் மற்றும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் அசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்குமாறு மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் விடுத்திருந்தார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக அசாத் சாலி அறிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92768.html

அங்கஜன் அடியால் சந்திரிகாவிடம் டக்ளஸ்! கடுப்பான விஜயகலா….

மகிந்த தோற்றால் உடனடியாகக் கட்சி மாறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக அமைச்சர் சந்திரிக்காவுடன் இரகசியமாகத் தொடா்பு கொண்டுள்ளாராம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடங்கி எல்லாக் கட்சிகளும் பொதுக்கூட்டணியுடன் சோ்ந்துள்ள நிலையில் அமைச்சரும் சோ்ந்தால் நிலை என்னவாகும் என அரசியல் அவதானிகள் சிந்தனைவசப்பட்டுள்ளனா். அமைச்சா் பொதுக்கூட்டமைப்பில் இணைந்தால் தான் கொலைகாரியாக மாறவேண்டிவரும் என விஜயகலா மகேஸ்வரன் ரணிலுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாராம். தனது கணவனைக் கொன்றவா்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டிய நேரத்தில் டக்ளஸ் இவ்வாறு கட்சி மாற முற்பட்டு தன்னைக் காப்பாற்ற முயல்வதாக விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை ஜனாதிபதி கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணம் வந்த போது அமைச்சரின் அடியாள்களுக்கும் அங்கஜனின் அடியாள்களுக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்று அமைச்சரின் அடியாட்களால் அங்கஜனின் தொண்டா்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக அமைச்சா் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியும் ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது சென்றதால் அமைச்சா் கொதிப்படைந்தே சந்திரிக்காவுடன் தொடா்பு கொண்டார் எனவும் உள்வீ்ட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/92771.html

Geen opmerkingen:

Een reactie posten