தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

நாம் எவரையும் மிரட்டவில்லை! ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை!- மாவை

இரத்தினபுரியில் இன்று அதிகாலை மைத்திரிக்கான மேடை மீது துப்பாக்கி சூடு! மூவர் காயம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:29.04 AM GMT ]
இரத்தினபுரி, காவத்தையில் இன்று அதிகாலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பொதுவேட்பாளர் மைத்திரிபாலி சிறிசேனவின் கூட்டம் ஒன்று இன்று காவத்தையில் இடம்பெறவுள்ளது.
இதனை முன்னிட்டு மேடை அமைப்புப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இன்று அதிகாலை 1.00 மணியளவில் துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளர் மேடையின் மீது தாக்குதல்!- மூவர் காயம்
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவின் பிரசார மேடை மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின் போது மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இரத்தினபுரி காவத்தையில் இடம்பெற்றுள்ளது.
இன்று இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இறுதி பிரசாரத்திற்கான மேடை அமைப்புப் பணிகள் இடம்பெற்ற வேளையில் அங்கு சென்ற துப்பாக்கித்தாரிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதன்போது காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரத்தினபுரி பிரதேசத்தில் மைத்திரியின் பிரசாரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு பலர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளரின் பிரச்சார மேடை மீது தாக்குதல்: ஐ.தேக. ஆதரவாளர் படுகாயம்
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரத்தினபுரி கஹாவத்தைப் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை தேர்தல் பிரச்சார மேடையை அலங்காரம் செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கஹவாத்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் கருணாசேன சாந்த தொடம்கொட மற்றும் பேர்டி ஆகிய இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் ரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாந்த தொடம்கொடவின் நிலைமை கவலைக்கிடம் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkq6.html
அரசாங்கத்தின் முக்கியமானவர்கள் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருகின்றனர்!- ஜேவிபி
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:46.51 AM GMT ]
ஜனாதிபதிக்கு உதவ வந்த அரசாங்கத்தில் உள்ளவர் காலத்துக்கு காலம் அமெரிக்க வீசாவை புதுப்பித்து வருவதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. 
ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இலங்கையின் ஒருமைப்பாடு பற்றி பேசும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் அதிகாரிகளும் நீண்ட காலம் இலங்கையில் தங்கியிருக்க உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எனவேதான் அவர் காலத்துக்கு காலம் அவர்கள் தமது அமெரிக்கா வீசாக்களை புதுப்பித்து வருவதாக அநுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச, டளஸ் அழகப்பெரும, சந்திம ராசபுத்ர, கோத்தபாய ராஜபக்ச போன்றோர் இலங்கையில் அதிக காலம் தங்கியிருக்கும் உத்தேசம் இல்லாதவர்களாகவே உள்ளனர்.
அமெரிக்காவில் சொத்துக்களை கொண்டுள்ள இவர்கள் 9 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்து ஜனாதிபதியை தேர்தலில் வெற்றி பெறச் செய்யும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினர் என்றும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkry.html
இலங்கையில் 77 இந்தியர்கள் பணயக்கைதிகளை போல நடத்தப்படுகின்றனர்!- இந்திய அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:54.24 AM GMT ]
இலங்கையில் உள்ள இந்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 77 இந்தியர்களையும் உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்படும் இந்திய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 77 இந்தியர்களும் கைதிகளை போல நடத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பீஹாரை சேர்ந்தவர்களே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், குறித்த இந்திய பணியாளர்களை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகருக்கு பணித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkrz.html

நாம் எவரையும் மிரட்டவில்லை! ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை!- மாவை
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:24.32 AM GMT ]
எங்கள்  வரலாற்றில் நாம் இதுவரை யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறான தகவல்களை  பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி-  பொது எதிரணி வேட்பாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 
பதில்-  ஒவ்வொருவரும் கருத்துக்களைக் கூறுவதற்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரினதும் கருத்துக்களும் கட்சிக் கூட்டங்களில் பெறப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படிதான் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை வாக்களிக்க செய்வதே அனைவரதும் கடமை என்றார்.
கேள்வி -  கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 
பதில் -  எமது கட்சியை சேர்ந்த ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று சிலரது அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. அவர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
கேள்வி-  தமிழரசுக் கட்சியின் தலைவர் நீங்கள் அவ்வாறு இருந்தும் தொலைபேசியில் அனந்தி சசிதரனுடன் ஏன் கதைத்தீர்கள். அதனால் பிரச்சனையாகிவிட்டதே?
பதில்-  அதில் எந்த உண்மையும் கிடையாது. அப்படி கதைத்த போதுதான் மயக்கம் வந்தது என்று கூறுவது தவறானது. அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார். அவர் முற்பகல் 11 மணிவரை சாப்பிடவில்லை என்பதும், அதனால்தான் மயக்கமுற்றார் என்றும் தெரியவந்தது. எங்கள் வரலாற்றில், நாம் யாரையும் இதுவரை மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்தான் தவறானவை. என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkq5.html

Geen opmerkingen:

Een reactie posten