[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 04:18.02 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்பாளர் ருத்திரமலர் ஞானபாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களாக செயற்பட்டவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவு பணங்களைப் பெற்றுக்கொண்டே மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் தெரிவித்தார்.
வடக்கில் மீள்குடியேற்றம் சிறப்பாக முறையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மிகவும் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நம்மது குழந்தைகள் கல்வியில் சாதனை படைக்கின்றனர்.
நாங்கள் எமது மாவட்டம், எமது குடும்பம் போன்றவை தொடர்பிலேயே சிந்திக்க வேண்டும். நாங்கள் இன்று சகல வளங்களும் பெற்ற மக்களாக வாழ்கின்றோம்.
எமக்கு மாற்றம் தேவையில்லை. மாற்றத்தினை கூறி இங்கு வருபவர்கள் தங்கள் சுயநலம் கருதியே வருகின்றனர்.
சம்பந்தன் ஐயா என்ன நோக்கத்துக்காக மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கினார் என்பது யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது.
எந்தவித உடன்படிக்கையும் இன்று ஆதரவு வழங்கியுள்ளார். மைத்திரிபால யார் அவர்களது உறவினரா?.இவை எல்லாம் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkqz.html
அக்கரைப்பற்றிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் மீது தாக்குதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 05:00.02 PM GMT ]
இந்தச்சம்பவம் இன்று இரவு 9.50 மணியளவில் மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் பஸ் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkq0.html
வன்முறைச் சம்பவங்களை முறையிட்டபோது மகிந்த காதில் வாங்கவில்லை: ரிசாத் குற்றச்சாட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 05:17.21 PM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து கஹட்டோவிட்டவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புனிதமிக்க பள்ளிவாசல்களில் அசிங்கமான பொருட்களைக் கொண்டு கொட்டினர்.
அளுத்கமையில் வன்முறையை அவிழ்த்து விட்டனர். கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் என இந்த நாட்டின் வரலாற்றில் இல்லாத அளவு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறின.
இந்த எந்தவொன்றின் போதும் ஜனாதிபதி எந்தவொரு காத்திரமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை. குறைந்தது ஒரு அறிக்கையேனும் விடவில்லை. நிறுத்துமாறு உத்தரவு கூடப் பிறப்பிக்க வில்லை.
தற்பொழுது அரசாங்கத்தை விட்டு முஸ்லிம் அமைச்சர்கள் வெளியேறிய போது நாட்டைப் பிரிக்கத் திட்டமிட்டதாக பொய்யான குற்றம் சாட்டுகின்றார்கள்.
நாம் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எப்போதும் சவாலாக இருந்ததில்லை. முஸ்லிம்கள் இனியும் இந்த நாட்டுக்கு எதிரானவர்களாக இருக்கப் போவதுமில்லை.
முஸ்லிம்களை இனவாதியாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkq1.html
மட்டக்களப்பு மாவட்டத்தில் சூடு பிடிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரப் பணிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2015, 11:25.44 PM GMT ]
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு பிரதேசங்களிலும் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (04) ஆரையம்பதி தொடக்கம் களுவாஞ்சிகுடி வரையிலான பிரதேசங்களில் பிரச்சார பணிகளை மேற்கொண்டு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
இந்தப் பிரச்சாரப் பணிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன், யோகேஸ்வரன், மாகாணசபை உறுப்பினர்களான துரைராஜசிங்கம், துரைரெட்ணம், பிரசன்னா, வெள்ளிமலை, கருணாகரம், நடராசா ஆகியோருடன் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் தங்களுக்கு வரவேற்பினை வழங்குவதோடு மாற்றத்திற்காக அவர்கள் காத்திருப்பதாகவும் அதற்காகவே அவர்கள் வாக்களிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் பிரச்சார வேலைப்பாடுகளில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKbkq3.html
கூட்டமைப்பு ஆதரவாளர் மீது கருணா குழுவினர் தாக்குதல்!
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 12:10.10 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர் கருணா குழுவினரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டிருப்பு தொகுதி உறுப்பினரான அரசடித்தீவைச் சேர்ந்த திரு மகேந்திரன் சந்திரகுமார் என்பவர் நேற்று மாலை கருணா குழுவைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவிற்காக தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நேரங்களில் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் கருணா மற்றும் பிள்ளையான் குழுவினரால் தாக்கப்படுவது அன்மைய நாட்களில் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை பட்டிருப்புத் தொகுதியில் உள்ள களுவாஞ்சிகுடியில் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த சமயமே மேற்படி நபர் கருணா குழுவினரால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான கட்சி உறுப்பினரை சம்பவம் நடைபெற்ற உடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு பா.அரியநேத்திரன் வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbkq4.html
Geen opmerkingen:
Een reactie posten