[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 11:26.06 PM GMT ]
தற்போதைய நிலையில் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்படும் நிலையில் கடிதப் போக்குவரத்து மூலமாகவே கட்சிதாவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் பிரகாரம் சில நாட்களுக்கு முன்னதாக அமைச்சர் மேர்வின் சில்வாவும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்.
எனினும் அவரை இணைத்துக் கொள்வதற்கு அத்துரலிய ரத்ன தேரர் கடும் அதிருப்தி தெரிவித்ததையடுத்து மேர்வின் கடிதம் தொடர்பில் பதில் அனுப்பப்படவில்லை.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மைத்ரியின் வீட்டுக்கு அதிகாலை வேளையொன்றில் மேர்வின் சில்வா நேரடியாக வந்திருந்த போதும் மைத்திரி அவரை சந்திக்காது திருப்பி அனுப்பியுள்ளார்.
இத்தகவல்களை சனிக்கிழமை மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்தார்.
மேலும் எதிர்வரும் நாட்களில் குறைந்த பட்சம் ஐந்து முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt3.html
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வலை விரிக்கும் அரசாங்கம்! ஆளுக்கு நூறு கோடி பேரம்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:21.03 PM GMT ]
ஆளுங்கட்சியின் சரிந்து போயிருக்கும் செல்வாக்கை தூக்கி நிறுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இவர்களில் சஜித் பிரேமதாச, ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, விஜேதாச ராஜபக்ஷ, ரங்கே பண்டார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிய வந்துள்ளது.
இதற்கு மேலதிகமாக அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணியின் பெயரும் இந்தப் பட்டியலில் அடிபடுகின்றது.
குறைந்தது எதிர்க்கட்சியின் பத்து முக்கியஸ்தர்களையேனும் ஆளுங்கட்சிக்கு அழைத்துவந்து அரசாங்கத்தின் செல்வாக்கை தூக்கி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தீவிர முனைப்பில் உள்ளனர்.
இவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து ஆளுங்கட்சிக்கு தாவும் பட்சத்தில் தலா நூறு கோடி ரூபா வரை அன்பளிப்பாக கொடுக்க தயார் என்று அரசாங்கம் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
மேலும் சஜித் பிரேமதாசவுக்கு அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக பிரதிப் பிரதமர் பதவியும், ஊவா மாகாண முதலமைச்சர் பதவியை ஹரினுக்கு அளிப்பதாகவும் ஆசை காட்டப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் செல்வாக்கில்லாத திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு ஐநூறு கோடி மற்றும் இரண்டு பெறுமதியான வாகனங்களை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, தமக்கு வெறுமனே நூறு கோடி பேரம் பேசும் அரசாங்கத்தின் முயற்சி தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு சில முக்கியஸ்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும் அவர்களை சமாதானப்படுத்தி அரச தரப்புக்கு அழைத்து வரும் முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt2.html
மைத்திரிக்கு 53 வீத வாக்கு என்ற கருத்துக்கணிப்புக்கு தாம் பொறுப்பல்ல: கொழும்பு பல்கலைக்கழகம்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:17.17 PM GMT ]
பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ஏ.எஸ் எட்வேட் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த கருத்துக்கணிப்பு பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்படாமல் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
எனவே கருத்துக்கணிப்புக்கும் பல்கலைக்கழகத்துக்கும் தொடர்பில்லை என்று பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள் அதற்கான அறிக்கையையும் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt1.html
லண்டனில் சிறுதுளி பெருவெள்ளம்: தாயக மக்களுக்கான அவசர நிவாரண உண்டியல் முனைப்பு
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:11.38 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த நிவாணர உண்டியல் முனைப்பு தமிழர்கள் கூடுகின்ற பகுதிகளெங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக 2009ம் ஆண்டு தமது சொந்த நிலங்களில் இருந்து முழுதாக பெயர்த்தெறியப்பட்ட மக்களே, கடந்த சில வாரங்களாக பெய்த கடும் மழைக்குள் அகப்பட்டு பெரும்துயரைச் சந்தித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 31,536 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10,896 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,715 பேரும், மன்னார் மாவட்டத்தில் 6,495 பேரும், மொத்தமாக 58,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாயகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி அமைச்சு இந்த நிவாரண உண்டியல் முனைப்பினை லண்டனில் மேற்கொண்டுள்ளது.
மனமுவர்ந்து உண்டியலில் இடுகின்ற ஒவ்வொரு சிறுதுளியும் தாயக மக்களின் கண்ணீர்துளிகளை துடைக்கும் என தெரிவித்துள்ள தாயக அபிவிருத்தி அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நம் அனைவரதும் முதற்கொடையாக இது அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblt0.html
ஆளும் கட்சி நகைப்பிற்குரிய பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றது: சஜித் பிரேமதாச
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:03.11 PM GMT ]
பெலியத்த பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதாக செய்யப்படும் பிரச்சாரமே அரசாங்கத்தின் மிகப்பெரிய தேர்தல் பிரச்சார நகைச்சுவையாக கருதப்பட வேண்டும்.
தேர்தல் பிரச்சாரத்தின் புதிய துருப்புச் சீட்டு என்ன?
புதிய துருப்புச் சீட்டு என்னவென்றால், சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்காக ஆளும் கட்சிக்கு செல்கின்றார் என்பதுதான்.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவையாக இதனைக் கருத வேண்டும்.
இந்த இழிவான பிரச்சாரம் முகநூல், டுவிட்டர் மற்றும் இணையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகிறது.
நான் ஒன்றைச் சொல்ல விரும்பகின்றேன். நாட்டை சீரழிக்கும் இந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஒரு நிமிடத்திற்கேனும் நினைத்தார்களா? கட்சிக்காக உயிரைத் தியாகம் செய்த தந்தையின் ஆத்மாவை இந்த சஜித் மகன் காட்டிக் கொடுப்பான் என்று.
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு நான் விலகப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbltz.html
யாழ்.நாவாந்துறையில் குழுக்களுக்கிடையிலான மோதல் தீவிரம்! ஊரடங்கு அமுலில்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 05:02.32 PM GMT ]
கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் மென்பான நிறுவனம் ஒன்று நடத்திய உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றியினையடுத்து, மேற்படி நாவாந்துறை பகுதியில் இரு விளையாட்டுக் கழகங்களுக் கிடையில் மோதல் உருவானது.
பின்னர் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சியினால் சற்றே மோதல் தணிந்திருந்தது.
இந்நிலையில் நேற்றய தினம், மீண்டும் மோதல் மூண்ட நிலையில் இரு பகுதியினரும் நேற்றைய தினம் போத்தல்கள், கற்களை கொண்டு ஒருவருக்கொருவர் தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியினை நேற்று நள்ளிரவு படையினர் சுற்றிவளைத்திருந்தனர். இதன்போது கடலில் மீன்பிடிப்பதற்குப் பாவிக்கும் டைனமைற் வெடிபொருளை, மீனவர்கள் சிலர் மோதலில் பயன்படுத்தி வெடிக்க வைத்திருக்கின்றனர்.
இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட பகுதியினர் மீது படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை குறித்த பகுதியில் தற்காலிக ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளதுடன், அப்பகுதியில் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது அல்லது வெடிபொருட்களை வைத்து தாக்குதல் மேற்கொள்பவர்கள் மீது கண்டதும் சுடும் உத்தரவு தமக்கும், படையினருக்கும் கிடைத்திருப்பதாக பொலிஸார் இன்றைய தினம் மாலை தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblty.html
Geen opmerkingen:
Een reactie posten