மைத்திரிபாலவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மீது துப்பாக்கிச் சூடு - எதிரணி மீது தாக்குதல்கள் தொடர்கின்றன!- கண்காணிப்பு அமைப்புக்கள்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 04:24.30 PM GMT ]
அரலகங்கவில பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெற்று முடிந்ததன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
20 வாகனங்களில் வந்த குண்டர் கூட்டத்தினர் பிரதேசத்தில் குழப்பங்களை விளைவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேசத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொது வேட்பாளர் தமது உரையை நிகழ்த்தி வெளியேறியதன் பின்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
எதிரணி மீது திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்கின்றன- கண்காணிப்பு அமைப்புக்கள்
எதிர்வரும் 8 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்ப்பார்க்காத அளவில் கடுமையான போட்டியாக இருக்கும் என்று தேர்தல் கண்காணிப்பாளர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் தேர்தல் வன்முறைகளும் எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு நிலையமான கபேயின் தகவல்படி இதுவரை தேர்தல்களை மையப்படுத்தி 1073 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
பொலிஸ்; தகவல்படி இதுவரை 130 தேர்தல் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வன்முறைகள் தொடர்பில் பிரதியமைச்சர் ஒருவர் உட்பட்ட 13 அரசியல் பிரமுகர்கள் கைதுசெய்யப்பட்டனர்கபேயின் அறிக்கையின்படி, எதிரணியை இலக்குவைத்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு கட்டமாக நேற்று பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கூட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தொலைபேசிகளின் மூலம் பிடிக்கப்பட்ட படங்களின்படி இந்த தாக்குதல் அருகில் இருந்த மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்து செல்வதையும் கவனிக்ககூடியதாக இருப்பதாக கபே குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls5.html
வென்னப்புவவில் நான்கு பேர் படுகொலை! சந்தேகநபர் ஆற்றில் பாய்ந்து தற்கொலை
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 04:40.05 PM GMT ]
பெண் மருத்துவர் மற்றும் அவரின் கணவர் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்ட செய்தி வெளியானது.
இதனையடுத்து ஆலை ஒன்றின் காவலாளி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் குறித்த குடும்பத்தினரை தாமே கொலை செய்ததாக குறித்த காவலாளி ஒப்புக்கொண்டதாக இன்று மாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்து கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதத்தை காட்டுவதாக பொலிஸாரை அழைத்து செல்லும் போது மாஓயா என்ற ஆற்றில் சந்தேகநபர் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொலை சம்பவங்களின் போது சந்தேகநபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு அறிவிப்பது தொடர்வது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls6.html
ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயாராகும் முக்கியஸ்தர்கள்! மஹிந்தவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 04:40.25 PM GMT ]
இவர்களில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான சரத் அமுனுகம, ஜனக பண்டார தென்னகோன், ரெஜினோல்ட் குரே, குமார வெல்கம, மஹிந்த சமரசிங்க, எஸ்.பி. நாவின்ன ஆகியோரும், பிரதியமைச்சர்களான சனத் ஜயசூரிய, லசந்த அலகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாண்டோ புள்ளே உள்ளிட்ட ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் எதிரணியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பொது வேட்பாளர் மைத்திரியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் வரும் நாட்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் இல்லத்தில் சந்தித்து எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கான ஆதரவை வெளிப்படுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் கட்சி தாவலைத் தொடர்ந்து ஆளுங்கட்சியில் இருந்து பெருந்தொகையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே தடவையில் கட்சிதாவும் முடிவில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் பிரகாரம் கடைசி நேரத்தில் அதாவது 8ம் திகதியை நெருங்கிய நிலையில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தன் பரிவாரங்களுடன் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தொடர்ந்தும் தனது அமைச்சுப் பதவிக்குரிய வசதிகளைப் பாதுகாத்துக் கொள்வது அவரது நோக்கமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKbls7.html
Geen opmerkingen:
Een reactie posten