[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 06:37.28 AM GMT ]
அரசாங்கம் எனக்கு தீங்கிழைத்து விட்டது. எனது பதவி மற்றும் சகல சலுகைகளையும் கைவிட்டு மக்களுக்காக எதிர்கட்சிக்கு வந்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு
மத்திய மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஆர்.ஜீ. சமரநாயக்க இன்று எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அவர் அறிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
சமரகோன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குண்டசாலை தொகுதியின் முன்னாள் அமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாணந்துறை துணை மேயர் ஸ்ரீ முனசிங்க மைத்திரக்கு ஆதரவு
பாணந்துறை நகர சபையின் துனை மேயர் ஸ்ரீ முனசிங்க பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.
கோட்டை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்திற்கு பாணந்துறை நகர சபையின் முன்னால் மேயர் நந்நன குzதிலக்கவும் கலந்துகொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblp7.html
46 லட்சம் ரூபா பெறுமதியான டொலர்களுடன் ஒருவர் கைது
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 06:47.19 AM GMT ]
சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து போங்கொங் நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்தார்.
கம்பஹா- இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபரிடம் இருந்து கைப்பற்றிய வெளிநாட்டுப் பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblqy.html
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி உட்பட 4 பேரின் வீட்டில் கைக்குண்டு தாக்குதல்
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 07:15.37 AM GMT ]
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், வீட்டு முன் பகுதியில் இருந்த கதிரைகள் உட்பட சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சேறிசேனாவை ஆதரித்து வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான, பொறியியலாளர் சிப்லி பாறூகின் வீட்டின் மீதும் அவரது ஆதரவாளரான புதிய காத்தான்குடி 02ஆம் குறுக்குத்தெருவிலுள்ள எம்.ஐ.எம்.முஜீப் என்பவரின் வீட்டின் மீதும் காத்தான்குடி 06ஆம் குறிச்சி தாறுஸ்ஸலாம் வீதியிலுள்ள ஏ.எல்.இஸ்ஹாக் மற்றும் காத்தான்குடி அல் அமீன் வீதியில் அமைந்துள்ள எம். பஷீர் ஆகியோரது வீட்டின் மீது கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இரண்டு கட்சி அலுவலகங்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகம் நேற்று நள்ளிரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த கதிரைகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகமொன்று தாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம் பெற்றுள்ளது. பாலமுனை வீதியிலுள்ள இவ்வலுவலகம் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்களும், ஜனாதிபதியின் கட்டவுட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblq0.html
ஜே.வி.பிக்கு எதிராக சேறுபூசும் வகையில் மகிந்தவின் சுவரொட்டி
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 07:51.09 AM GMT ]
மகிந்த ராஜபக்ஷ தனது இறுதி தேர்தல் தந்திரமாக இப்படியான வங்குரோத்து முறைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பியின் இணையத்தளம் கூறியுள்ளது.
ஜே.வி.பிக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை இருக்கிறது என்று எழுப்பட்டுள்ள அந்த சுவராட்டிகளின் ஜே.வி.பியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு நபர்களை பயன்படுத்தி பல ஊடக செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பிரச்சார தந்திரங்களில் புதிய முறையாக இந்த சேறுபூசும் சுவரொட்டிகெள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblq2.html
Geen opmerkingen:
Een reactie posten