[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 07:42.48 AM GMT ]
அவர் வைத்தியசாலையின் முதல் வகுப்பு சிகிச்சை பிரிவு விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமணதாச அபேகுணவர்தன, அவ்வப்போது தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் இருக்கும் ஆதரவு நிலைமை குறித்து விசாரித்து வந்ததாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்ததுடன் எமது இணையத்தளமும் அந்த செய்திகளை பிரசுரித்திருந்தது.
சுமணதாச அபேகுணவர்தனவின் சோதிட ஆலோசனைக்கு அமையவே மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில், சுமணதாசவின் சோதிட எதிர்வுகூறல்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் அது வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவருக்கு இந்த திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblq1.html
சந்திரிக்காவை கண்டிக்கும் கோத்தபாய
[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 07:09.08 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கும் பொதுக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியிருந்தார்.
இலங்கையின் பொது மக்கள் 90 ஆயிரம் போரையும் சுமார் 30 ஆயிரம் இராணுவத்தினரையும் கொலை செய்தனர்.
சுமார் 50 ஆயிரம் இராணுவத்தினரை அங்கவீனமாக்கினர். அன்று இலங்கை மத்திய வங்கியை அழித்தனர்.
விடுதலைப் புலிகள் எங்கு தாக்குதல்களை நடத்தவில்லை?. அனைத்து இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.
இதற்கு பொறுப்பான பயங்கரவாதி பிரபாகரனை மக்கள் மறக்கும் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்துள்ள நிலையில், பல வருடங்களின் பின்னர் இந்த தலைவி யாழ்ப்பாணத்திற்கு சென்று பிரபாகரன் ஜயா என்று கூறுகிறார்.
யாரது தேவைக்காக எதற்காக அவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்கிறார்.
பிரபாகரனை நாங்கள் மறக்க செய்ய முயற்சிக்கும் போது இவர்கள் மீண்டும் அவரை வீரனாக மாற்ற முயற்சித்து வருகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTXKblqz.html
Geen opmerkingen:
Een reactie posten