வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சராக நியமனம் பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
செத்சிரிபாயாவில் உள்ள தனது அமைச்சில் இன்று மாலை தனது அமைச்சுக் கடமைகளைப் ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தக வாணிப அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசாட் பதியுதீன், கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், முன்னாள் பிரதி அமைச்சர் ஹூஸைன் பைலா, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேச பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பௌத்த, இந்து, முஸ்லிம், கிருஸ்தவ மத வழிபாட்டுகளும் இடம் பெற்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjwz.html
Geen opmerkingen:
Een reactie posten