தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 januari 2015

நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை



தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 03:22.15 PM GMT ]
யாழ்.சுண்ணாகம் பகுதியில் குடிநீருக்கு பங்கம் விளைவித்த தனியார் மின் உற்பத்தி நிலையத்தை மூடுமாறு கோரி முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுண்ணாகம் சிவன்கோவிலுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வைத்தியர்கள், அரசியல் கட்சிகள் இணைந்து உண்ணாவிரதத்தினை நடத்தியிருந்தனர்.
கடந்த 4 நாட்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில், யாழ்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் போராட்டத்தைக் கைவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேற்படி போராட்டத்தை ஒழுங்கமைத்திருந்த, வைத்திய கலாநிதி செந்தூரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையத்தினர் தெற்கில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் ஆகியோருடன் 23ம். 24ம் திகதிகளில் நடத்திய சந்திப்புக்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் படியும், அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு, விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் அடுத்த கட்டமாக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்த ஒரு அமைப்பின் ஊடாக பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcir5.html
நாட்டில் இருந்து வெளியேறியுள்ள ஊடகவியலாளர்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படவில்லை
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 03:18.16 PM GMT ]
இலங்கையில் இருந்து வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இன்னும் அழைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் பல அமைச்சர்களும் வெளியேறிச்சென்ற ஊடகவியலாளர்கள் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனினும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இன்னும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ கோரிக்கை ஒன்றையும் விடுவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் காலத்தில் அச்சம் காரணமாக பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றனர்.
புலி ஆதரவாளர்கள் என்றும் துரோகிகள் என்றும் கூறப்பட்ட நிலையிலேயே அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறினர்.
இவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கோவைகளும் திறக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcir4.html

Geen opmerkingen:

Een reactie posten