இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக களமிறங்கி உள்ளன.
இதையடுத்து, இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி இலங்கையிலுள்ள பொரளை பகுதியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில், பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டு ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டை நாம் தமிழர் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், ''நடிகர் சல்மான்கான் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும்'' எனவும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக சல்மான்கான் வீட்டு முன்பு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். என தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyBTYKblw6.html
Geen opmerkingen:
Een reactie posten