தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 januari 2015

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன! அவரது சின்னம் அன்னப்பறவை!- சதிக்கு பலியாக வேண்டாம்!- மனோ



லண்டன் லூசியம் சிவன் கோயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவி!
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:48.09 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக லண்டன் லூசியம் சிவன் ஆலயம் 3750 ஸ்ரேலிங் பவுண் நிதியை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைக்கு வழங்கியது.
இதில் சித்தாண்டி 1ம் வட்டாரம் சித்தி விநாயகர் ஆலய இடைத்தங்கல் முகாம், சித்தாண்டி முதியோர் சங்க கட்டிடம் என்பவற்றில் 360 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, சோயாமீட், தேயிலை அடங்கிய பொதிகள் கையளிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், இந்து பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம், பேரவையின் ஆட்சிக்குழு பிரதிநிதிகள், பேரவையின் திடீர் அனர்த்த சேவையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.
லண்டன் லூசியம் சிவன் ஆலயம் கிழக்கு மாகாணத்தில் பல சமூக சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் அடிப்படையில் திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம், ஈச்சலம்பற்றிலும் கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி 350 மாணவர்களுக்கு இலவச கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் நடாத்துகின்றன.
கடந்த வருடம் 10 லட்சம் ரூபாய் இதற்காக செலவிடப்பட்டது. தொடர்ந்து சில வருடம் இவ் வகுப்புகளை நடாத்தவுள்ளனர்.
அத்தோடு மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளை பாரமரிக்கும் லண்டன் சிவன் இல்லம் என்னும் தர்மஸ்தாபனத்தை நடாத்துகின்றது.
கடந்த வருடம் 5ம் ஆண்டில் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் 38 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி உதவியை வழங்கியது.
2010ம், 2011ம்,2012ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல லட்சம் ரூபாய் நிதியில் உதவிகளை வழங்கியது.
அது மட்டுமன்றி அண்மையில் மலை நாட்டில் கொஸ்லாந்த, மீரியபெத்த ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாடு கருதி கல்வி உபகரண உதவிகளையும் பிரத்தியேக வகுப்பகளை தொடர்ந்து நடாத்துவதற்கான உதவிகளையும் பல லட்சம் ரூபாவில் வழங்கியுள்ளது.
தொடர்ந்து சில வருடங்களுக்கு இவ்வாறான உதவியை வழங்க திர்மானித்துள்ளது. பெரும்பாலும் இவ்வாறான சமூக சேவை நிகழ்வுகளுக்கு இயக்குனர் சபையினரின் நிதிகளே பயன்னடுத்தப்படுகின்றது.
இவ்வாறான உதவிகளை எமது கிழக்கு மண்ணிற்கு வழங்கி வரும் லண்டன் லூசியம் சிவன் ஆலய தர்மகத்தா சபையே கிழக்கு தமிழ் மக்கள் நன்றி உணர்வோடு நினைவு கூருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku4.html

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன! அவரது சின்னம் அன்னப்பறவை!- சதிக்கு பலியாக வேண்டாம்!- மனோ
[ திங்கட்கிழமை, 05 சனவரி 2015, 08:53.11 AM GMT ]
எங்கள் பொது எதிரணியின் சின்னம், அன்னப்பறவை. எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடும் சின்னம், அன்னப்பறவை. இதை நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஆர். ஏ. சிறிசேன என்ற ஒரு வேட்பாளரை தேடிப் பிடித்து, அவரை போட்டியிட வைத்து, அவருக்கு மைத்திரிபாலவை போல் ஆடை உடுத்தி, மூக்கு கண்ணாடி அணிவித்து, பவுடர் பூசி, அலங்கரித்து, படம் பிடித்து, அந்த படத்தை தமிழ் ஊடகங்களில் விளம்பரமாக போட்டு, அப்பாவி தமிழ் மக்களை குறி வைத்து ஏமாற்றும் ஒரு தில்லாலங்கடி வேலையை மகிந்த அரசின் முகவர்கள் சிலர் செய்கிறார்கள் என்றும் அவர் மேலும் தரிவித்தார்.
 கட்சியின் ஊடக செயலகம் மூலம் விடுத்துள்ள விசேட செய்தி அறிவித்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது தொடர்பாக  மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இந்த ஆர். ஏ. சிறிசேன என்ற வேட்பாளரின் சின்னம், கொடி சின்னமாகும். எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னம், அன்னப்பறவை சின்னமாகும். ஊடகங்களில் விளம்பரம் செய்து மக்களை குழப்ப முயலும் அரசாங்கம் இன்னொன்றையும் செய்கிறது. மாதிரி வாக்குசீட்டு ஒன்றை அச்சடித்து தமிழ் மக்கள் மத்தியில் விநியோகம் செய்துள்ளது.
இந்த மாதிரி வாக்குச்சீட்டில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமாக, கொடி சின்னம் காட்டப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு மக்களை குழப்பும் ஒரு வெட்கங்கெட்ட மோசடி நடவடிக்கையாகும்.
இத்தகையை வாக்குச்சீட்டு குறிப்பாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டு மகிந்த ராஜபக்ச அணி செய்யும் இந்த மோசடி வேலையை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
உண்மையான வாக்குச்சீட்டில், எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் தமிழ், சிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது பெயருக்கு இடதுபுறம் அவரது சின்னமான, அன்னப்பறவை அச்சிடப்பட்டிருக்கும். ஒட்டு மொத்த பத்தொன்பது வேட்பாளர்களின் பெயர் வரிசையில், எங்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர், பத்தாவதாக இடம்பெற்றுள்ளது.
இவை பற்றிய இந்த உண்மை தகவல்களை விஷயம் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் தங்கள் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, ஊரவர்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூமாகவோ எடுத்துக் கூறி தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
மைத்திரியை குழப்பும் போலி சிறிசேன! மஹிந்தவின் முட்டாள்தனம் அம்பலம்
ஜனாதிபதி தேர்தலில் தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ தரப்பு போலி சிறிசேன ஒருவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடைசி நேரத்தில் அவரை போட்டியில் இருந்து விலக செய்து அதனூடாக மஹிந்த தரப்பு பொது வேட்பாளருக்கு சேறு பூசும் நிகழ்ச்சி நிரலுக்கு தயாராகி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இம்முறை தேர்தலில் போட்டியிட ஆர்.ஏ.சிறிசேன என்பவர் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்களை போன்று ஒப்பனை செய்யப்பட்டு  இன்று சிங்கள நாளிதழ்களில் அவரின் விளம்பரங்கள் பிரசுரமாகின்றன.
மைத்திரி அணியும் உடை வடிவமைப்பு முதல்கொண்டு அவர் அணியும் மூக்கு கண்ணாடி வரை அச்சு அசலாக அவரை போன்று போலி சிறிசேன உருவாக்கப்பட்டுள்ளமை இதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளார் என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.
கடைசி நேரத்தில் இந்த அரசாங்கத்தின் செட்டப் சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலக செய்து சிறிசேன போட்டியில் இருந்து விலகிவிட்டதாக பிரச்சாரம் செய்ய மஹிந்த தரப்பு திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோல்வி நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில்  மகிந்தவின் முட்டாள்தனமான  செயற்பாடுகளில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூறு நாட்கள் போதாது,115 நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன்: ஆர்.எ.சிறிசேன
ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியாகும் சில தினசரி பத்திரிகைகளில் சிறிசேன என்ற பெயரில் கொடி சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஒருவரின் விளம்பரம் பிரசுரமாகியிருந்தது.
பார்ப்பதற்கு மைத்திரிபால சிறிசேன போன்று தோற்றமளிக்கும் ஒருவரின் புகைப்படத்தையும் அதில் கொடி சின்னத்தையும் குறித்த விளம்பரம் தாங்கியிருப்பதுடன் நான் சொல்வதெல்லாம் உண்மை. மாற்றம் செய்வதற்கு 100நாட்கள் போதாது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை உட்பட அனைத்தையும் மாற்றுவதற்கு எனக்கு 115 நாட்கள் வேண்டும் எனவும் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
வரலாறு தெரியாமல் ஆபிரிக்காவின் காந்தி எனவும், இந்தியாவின் நெல்சன் மண்டேலா எனவும் அதில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விளம்பரம் யார் கொடுத்தார்கள், குறித்த வேட்பாளர் எங்கே போட்டியிடுகின்றார், எதற்காக வடக்கு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஆனாலும் இது குழப்பத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதென கூறப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTZKbku5.html

Geen opmerkingen:

Een reactie posten