தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

இந்த ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன!

விமல் வீரவன்ச கட்சி உடைகிறது! நேற்று மட்டும் 11 பேர்! நாளை மேலும் பலர் எதிரணியுடன் இணையவுள்ளனர்
[ புதன்கிழமை, 31 டிசெம்பர் 2014, 11:35.19 PM GMT ]
அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பெரும்பான்மையான முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவாக கட்சி தாவியுள்ளனர்.
நேற்றைய தினம் தேசிய சுதந்திர முன்னணியின் சுமார் 11 முக்கியஸ்தர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டில் கட்சி தாவியுள்ளனர்.
இவர்களில் ஊவா மாகாண சபை தேர்தலின் போது ஆளுங்கட்சிக்கு தாவிய உதயகுமார, அம்பாறை மாவட்டத்தலைவர் அனுர முனசிங்க, அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஜனக திசாநாயக்க, படல்கும்புறை முன்னாள் பிரதேச சபைத் தலைவர் ஸ்ரீசிந்தக, கடுவெல முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பிரபாத் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
நாளைய தினம் தேசிய சுதந்திர முன்னணியின் இன்னுமொரு முக்கியஸ்தருடன் மேலும் பலர் கட்சி தாவக் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCQVKbnv5.html
அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி! ஆளுங்கட்சி ஆட்டம் காணத் தொடங்குகின்றது
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:51.06 AM GMT ]
அமைச்சர் பசில் ராஜபக்சவின் கோட்டையாக கருதப்படும் கம்பஹாவில் இன்று பொது வேட்பாளர் மைத்திரியின் பிரசாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் சகோதரரும், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சருமான பசில் ராஜபக்ச கம்பஹா மாவட்டத் தலைவராக இருக்கின்றார்.
இதன் காரணமாக அங்கு நடைபெறும் மைத்திரியின் கூட்டத்துக்கு பொதுமக்கள் பெருமளவில் வருகை தருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
அரசாங்கத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தபடி புத்தாண்டு தினமான இன்று அதிகாலை முதல் கம்பஹா பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மைத்திரியை வரவேற்கும் பதாதைகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
பிரதேசம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு ஆதரவாளர்கள் மைத்திரியை வரவேற்க காத்திருக்கின்றனர்.

மேலும் இன்று நடைபெறும் கம்பஹா பிரச்சாரக் கூட்டத்தில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw0.html
இந்த ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன!
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 01:20.04 AM GMT ]
மலர்ந்துள்ள 2015ம் ஆண்டில் மூன்று தேசிய ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 8ம் திகதி மிகவும் தீர்மானம் மிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக இரண்டு தேசிய ரீதியான தேர்தல்கள் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் இந்த ஆண்டில் நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் நிறைவின் பின்னர் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் இவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw3.html

Geen opmerkingen:

Een reactie posten