தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 26 januari 2015

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அமெரிக்கத் தூதரக அதிகாரி சந்திப்பு



கடமைகளைப் பொறுப்பேற்றார் மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 12:23.35 PM GMT ]
மேல்மாகாண ஆளுநராக புதிதாக நியமனம் பெற்ற கே.சி. லோகேஸ்வரன் இன்று பம்பலப்பிட்டியவில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கே.சி.லோகேஸ்வரன் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும் பல்வேறு அமைச்சுக்களின் செயலாளர், அரசாங்க அதிபர், தூதுவர் பல்வேறு கமிசன்களின் தலைவராக கடமையாற்றியவர்.
ஆளுனர் கடமையேற்பு வைபவத்தில் மேல்மாகண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிரதி அமைச்சின் செயலாளர் ஜெயந்தி விஜித்த, ஆளுனரின் செயலாளர் சுனில் ஆபேசிங்க மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முசம்மிலும் மற்றும் மாகாண அமைச்சர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchs2.html
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அமெரிக்கத் தூதரக அதிகாரி சந்திப்பு
[ திங்கட்கிழமை, 26 சனவரி 2015, 12:34.22 PM GMT ]
அமெரிக்கத் தூதரகத்தில் அலுவலக பொறுப்பாளர் ஹென்ரூ மேன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருவரும் முக்கியமான இருத்தரப்பு விடயங்கள் மற்றும் இரு நாடுகளில் உறவுகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதனிடையே இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுபைர் எம்.எச். டார் சையத்தும் இன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன் போது இரு நாடுகளுக்கு இடையிலான முக்கியமான விவகாரங்கள் மற்றும் இருத்தரப்பு உறவுகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாட்டு தூதுவர்களின் சந்திப்பின் முடிவில் இராஜாங்க அமைச்சர் நினைவுச் சின்னங்களையும் பரிசளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRaKchs3.html

Geen opmerkingen:

Een reactie posten