[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:21.48 AM GMT ]
நாடு எதிர்நோக்கியுள்ள மிகப் பாரதூரமான சமூகப் பேரவலத்திலிருந்து மீண்டு எழ புத்தாண்டில் மதிநுட்பமான தீர்மானம் எடுப்போம்.
நாட்டின் சமூகத்திற்கு மிகவும் முக்கியமானதும் தீர்மானம் மிக்கதுமான ஒர் சூழ்நிலையில் 2015ம் ஆண்டு மலர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நம் சவால்களை எதிர்நோக்கியுள்ளோம்.
போர் காரணமாக உடைந்து போயுள்ள மானுட தொடர்புகளை மீளக் கட்டியெழுப்பி புதிய நாடொன்றை புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் சவால்கள் அதில் முக்கியமானவையாகும்.
எனினும் இந்த சவால்களை வெற்றி கொள்ளப்படுவதற்கு மாறாக, அநீதி, பீதி மற்றும் சமூக விரோத செயற்பாடுகள் நாடு முழுவதிலும் வியாபிக்கத் தொடங்கியது.
இவ்வாறான துர்நடத்தைகளுக்கு அரசாங்க மற்றும் அரச பாதுகாப்பு கிடைக்கப் பெற்றமை கவலைக்குரியதாகும்.
நாடு எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான நிலைமைகளை புரிந்து கொண்டு செயற்படுமாறு கோறுகின்றேன்.
உங்கள் அனைவருக்கும் மிக இனிமையான புத்தாண்டு வாழ்த்துக்கள் என ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnwy.html
நாட்டை பாதுகாப்பது மெய்யான நோக்கமாக இருக்க வேண்டும்!- ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:14.43 AM GMT ]
பிரிவினைவாதத்தை தூண்டும் குரோத அரசியலிலிருந்து விலகிக் கொள்வது எங்களது புத்தாண்டு பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.
தேசத்தை மேம்படுத்தும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் 2015ம் ஆண்டை வரவேற்போம்.
எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ளும் அர்ப்பணிப்புடன் புத்தாண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.
கடந்த ஒரு தசாப்த காலமாக புத்தாண்டு தொடக்கங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பிரார்த்தனைகள் வெற்றியீட்டியுள்ளன.
நூற்றாண்டு கால தேவைகளை கடந்த ஒரு தசாப்த காலத்தில் செய்திருக்கின்றோம்.
எல்லையற்ற அர்ப்பணிப்புடன் இல்லாதொழிக்கப்பட்ட பிரிவினைவாதம் பல்வேறு வழிகளில் தலைதூக்க எத்தனிக்கின்றது.
பிரிவினைவாதத்திற்கு ஊக்கமளிக்கும் குரோத அரசியலில் ஈடுபடக் கூடாது என்பது எமது புத்தாண்டு பிரார்த்தனையாக அமைய வேண்டும்.
தேசிய ஒற்றுமையையும் நாட்டின் இறையாண்மையையும் மதிக்கும் அனைவரும் நாட்டை பாதுக்காக தூரதரிசனத்துடன் ஒன்றிணைந்து கொள்ள வேண்டும்.
வெற்றிகொள்ளப்பட்ட நாட்டை எவருக்கும் மீளவும் பின்நோக்கி நகர்த்த இடமளிக்க முடியாது.
தேசத்தின் வெற்றிமிக்க ஆண்டாக மாற்றமடைய உங்கள் அனைவருக்கும் சக்தி கிட்டட்டும் என பிரார்த்திக்கின்றேன்.
பிறந்திருக்கும் இந்த புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமையட்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnv7.html
Geen opmerkingen:
Een reactie posten