[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 02:53.30 PM GMT ]
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாடு இருண்ட யுகத்தில் இருந்து என்பது சிலருக்கு மறந்து போயுள்ளது.
அமைச்சர்கள் ஒரு இன அல்லது மத சமூகத்திற்கு சேவையாற்றும் நோக்கில் நியமிக்கவில்லை.
அமைச்சர்கள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக சேவையாற்ற வேண்டும்.
எந்த ஒருவரும் கட்சி தாவுவதனால் எனக்கு பிரச்சினை கிடையாது.
எனக்கு இந்த நாட்டின் மக்கள் ஆதரவு இருக்கும் வரையில் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmx2.html
மகிந்தவின் ஆட்சியிலே தமிழர்கள் அதிகளவில் கொல்லப்பட்டனர்! புகழ்ந்து பேசிய ஈபிடிபி
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:17.24 PM GMT ]
இன்றைய தினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் மு.சந்திரகுமார்,
இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவே பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகித்திருந்தார்.
அதேபோன்று சந்திரிக்கா யுத்த வெற்றின் 70வீதம் தன்னை சாரும் என கூறுகின்றார். இவர்களுக்கு மேலதிகமாக சரத் பொன்சேகா, பாதுகாப்பாக யுத்தத்தை தாம் நடத்தியதாக கூறுகின்றார்.
அப்படியானால் மைத்திரிபால சிறிசேனாவும், சந்திரிக்காவும் யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிரிழப்புக்களுக்கு, பொறுப்பேற்பார்களா?
சரத் பொன்சேகா உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பாரா? என கேள்வி எழுப்பி பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் டக்ளஸ்,
அதே விடயத்தை கூறி அவர்கள் மக்கள் உயிரிழப்புக்களுக்கு பொறுப்பேற்பார்களா? என கேள்வி எழுப்பி பேசினார்.
ஆக மொத்தத்தில் மக்கள் போரில் அதிகளவில், கொல்லப்பட்டார்கள் என்பதை அந்தக் கொலைகளை இந்த மஹிந்த தலைமையிலான ஆட்சியாளர்கள் மற்றும் படையினர் செய்தார்கள் என்பதனை இன்று அந்த ஆட்சியில் அங்கத்துவம் பெற்றிருப்பவர்களே வாய்விட்டுக் கூறியிருக்கின்றார்கள்.
இவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பி பேசிக் கொண்டிருக்கையில் மஹிந்த, மேடையில் அமைதியாக அமர்ந்திருந்து அவர்கள் ஏதோ வீராவேசமாக பேசுவதாக நினைத்தபடி இருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten