தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

மீண்டும் இலங்கை செல்வேன்: சல்மானின் அதிரடி அறிவிப்பு!

2015ம் ஆண்டே 2014 ஐ விட நீ மாற்றம் செய்வாயா!
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 07:16.39 AM GMT ]
இன்று 2015ம் ஆண்டின் பிறப்பு. இது ஆங்கில வருடப்பிறப்பாயினும் நிர்வாகச் செயற்பாட்டில் ஆங்கில வருடமே நடைமுறையில் இருப்பதால் 2015ம் ஆண்டின் பிறப்பை வரவேற்பது நம் கடமையாகும்.
நேற்றோடு முடிந்து போன 2014ம் ஆண்டு எப்படி என்று கேள்வி எழுப்பினால் எதுவும் இல்லை என்பதாக மட்டுமே விடை இருக்கும்.
ஆண்டின் இறுதியில் என்னைப் பார்த்த 2014 கலண்டர் கேட்டது. என்னைத் தவிர வேறு என்ன கிழித்தாய் என்று.
கலண்டர் இப்படிக் கேட்டால், கலண்டரைப் பார்த்து ஓ! 2014ம் ஆண்டே! நீ நாளும் கிழிந்து போனதைத் தவிர வேறு எதைத்தான் உன் காலப்பகுதியில் கிழித்தாய் என்று கேட்கலாம்.
அந்தளவில்தான் 2014ம் ஆண்டின் முடிவு இருந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் வரட்சி, முடிவில் வெள்ளம், இடையில் பஞ்சம் என்பதாக 2014 முடிந்து போயிற்று.
இன்று 2015ம் ஆண்டின் பிறப்பு. 2015ம் ஆண்டின் பிறப்பு எப்படி அமையும் என்று சாதகம் பார்ப்பதற்கு முன்பதாக 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இன்று வியாழக்கிழமையில் பிறக்கின்ற புதுவருடம் அடுத்த வியாழக்கிழமை அன்று ஜனாதிபதித் தேர்தலைத் தருகிறது எனில் 2014 ஐ விட பல மடங்கு கடுப்பு நிறைந்த வருடமாக 2015 இருக்கும் என்று துணிந்து கூறலாம்.
எதுவாயினும் மகிந்த ராஜபக்­ச - மைத்திரிபால சிறிசேன என்ற ஜனாதிபதி வேட்பாளர்களின் கடும் போட்டியின் மத்தியில் நடக்கப் போகும் தேர்தல் தரும் முடிவைப் பொறுத்தே 2015ம் ஆண்டின் சாதக பலனைக் கணிப்பிடுவது பொருத்தமானது.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்; மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்பது மைத்திரிபால சிறிசேனவின் அறைகூவல். மகிந்த ராஜபக்­சவோ புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அனைவரும் ஒன்று படுவோம் வாருங்கள் என்கிறார்.
இரண்டு அறைகூவல்களிலும் எது வெற்றி பெறும் என்பது நமக்குத் தெரியாதாயினும் தேர்தலுக்குப் பின்பான களநிலைமை அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.
2015ம் ஆண்டுக் குழந்தை பிறந்து எட்டாவது நாள் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் என்பதால் அதனைத் தொடர்ந்து நடக்கப் போவது என்ன? என்று பலன் கூறுவது, கூறுபவருக்கும் வில்லங்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னர் 2015ம் ஆண்டுக் குழந்தையின் சாதக பலனைப் பார்க்கலாம் என்று கூறுவதே சோதிடர் தப்பித்துக் கொள்ளக் கூடிய ஒரே வழி.
இதற்கு அப்பால் 2015ம் ஆண்டு தமிழர்களுக்கு எப்படி என்று பலன் பார்ப்பதும் தேவையான ஒன்றுதான்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்து விட்டது. இந்த அறிவிப்பு மைத்திரிக்கு கொடுக்கக் கூடிய மகிழ்வை விட, மேலும் பல மடங்கு கூடிய மகிழ்வை மகிந்த ராஜபக்­சவுக்கு கொடுக்கும்.
அதாவது தனது தேர்தல் பிரசாரத்தில் மைத்திரிக்கான கூட்டமைப்பின் ஆதரவை தனக்குச் சாதகமாக்கலாம் என்பது மகிந்தவின் நிலைப்பாடு.
எனவே 2015 தமிழர்களுக்கு எப்படி என்ற பலனுக்கும் ஜனவரி 09ம் திகதி வரை பொறுத்திருப்பது தவிர்க்க முடியாததாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmoz.html
மைத்திரியின் கொள்கைகளை விளக்கும் கூட்டம்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 08:22.02 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க ஒன்றுகூடலொன்று இன்று காலை கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஏற்பாடு செய்திருந்தார். இதில் முன்னாள் அமைச்சர்களான மைத்திரிபால சிரிசேன, ரவுப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன், ராஜித்த சேனாரத்ன, எதிர்க் கட்சித் தலைவர் .
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo2.html
மீண்டும் தபால் மூலம் வாக்களிக்கலாம்: தேர்தல் செயலகம்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 08:25.06 AM GMT ]
தபால்மூல வாக்களிப்பதற்கு முடியாமற்போன அரச உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் 02 ஆம் திகதி மீண்டும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள அரச உத்தியோகத்தர்களை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாஸ மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான காலஅவகாசம் எதிர்வரும் 04 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
85 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
வெள்ளம் காணப்பட்ட பகுதிகளின் நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதால், எதிர்வரும் சில தினங்களில் மட்டக்களப்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo3.html
மீண்டும் இலங்கை செல்வேன்: சல்மானின் அதிரடி அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 08:46.20 AM GMT ]
சல்மான்கானின் இலங்கை விஜயம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தனது விஜயம் தொடர்பில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் விளக்கமளித்துள்ளார் சல்மான்கான்.
இது தொடர்பில் டுவிட்டரில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், 'தொடர்ந்தும் இலங்கைக்குச் செல்வேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 'ரெடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற காலப்பகுதியில் நாம் இலங்கையில் மருத்துவ முகாமொன்றை நடத்தினோம்.
'கிக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இலங்கைக்கு சென்று மீண்டுமொரு மருத்துவ முகாமை நடத்துவதற்கு ஜெக்குலின் பெர்ணான்டஸ் அழைப்பு விடுத்தார்.
அத்துடன், ஜெக்குலினின் உணவு விடுதிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது. எமது தீர்மானத்துக்கிணங்க, மேற்படி மருத்துவ முகாமை நடத்தினோம்.
ஜெக்குலினின் உணவு விடுதிக்கும் சென்றேன். இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயமாகும். மீண்டும் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு செல்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என சல்மான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo4.html

Geen opmerkingen:

Een reactie posten