தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 april 2014

பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை – சிறீலங்கா இராணுவத் தளபதி!!

ஜெனீவாவிற்கு முன்னர் வெளிநாட்டு அமைப்புக்களை தடை செய்ய தவறி விட்டோம் ஜே.என்.பி கவலை !!!

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருக்க வேண்டுமென ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.இலங்கை அரசஙர்கம் அண்மையில் 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்திருந்தது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களினால் நாட்டுக்கு அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புத் தலைவர்கள் போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமிழீழத்தை அமைக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/23997.html#sthash.rP3nBCZQ.dpuf


பல வருட உழைப்பின் பெறுபேறே புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை – சிறீலங்கா இராணுவத் தளபதி!!!

வெளிநாடுகளிலுள்ள புலிகளிற்கு ஆதரவான 16 அமைப்புக்களைத் தடை செய்வதற்கான விடயம் ஏதோ ஒரு இரவில் நடந்தததல்ல. அது கடந்த நான்கு வருடங்களிற்கு மேலான கடிணமான உழைப்பினாலேயே முடிந்தது என சிறீலங்கா இராணுவத் தளபதி பிரிகேடியர் ருவான் வணிகசூரியா தெரிவித்துள்ளார்.
கோத்தபாயா இராஜபக்சாவின் முல்லைத்தீவு விஜயத்தையொட்டியே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ள ருவான் வணிகசூரியா வன்னிக் மக்களிற்கு குறிப்பாக கேப்பாப்புலவு மக்களிற்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோத்தபாயா இராஜபக்சா அங்கு சென்றிருந்த நேரத்திலே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மாணம் 1373ன் கீழான இந்த தடைக்கான உத்தரவு இலங்கை அரசால் வர்த்தமாணிப் பிரகடனம் மூலம் இன்று வெளியிடலாம் என கொழும்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடையின் மூலம் மேற்படி அமைப்புக்களுடன் இலங்கையிலுள்ளோர் தொடர்பு கொள்வதற்கும், மேற்படி அமைப்பிலுள்ளோர்கள் இலங்கையில் உள்ள சொத்துக்களை பரிமாற முடியாமை, பணப்பங்களிப்பு செய்ய முடியாமை, அரசியலிலில்; ஈடுபடுதல் தவிர்க்கப்படுதல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம் என சிறீலங்கா அரசு நம்புகிறது.
இந்தத் தடைக்கான ஆதாரங்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலகச் செயலகம் கைப்பற்றப்பட்ட போது பெறப்பட்டவை என்றும் புதுக்குடியிருப்பிலிருந்த அந்தச் செயலகத்தை விட்டு புலிகள் அவசரமாக வெளியேறிய போது தங்களிடமிருந்த ஆவணங்கள், வெளிநாட்டு செயற்பாடுகள் குறித்த ஆதாரங்கள், கணனிகள் என்பவற்றை புலிகள் கைவிட்டுச் சென்ற போது கைப்பற்றப்பட்டதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
மறுபுறமாக இலங்கையிலுள்ள தமிழ்க் கட்சிகள், பிரமுகர்கள், தமிழ் மக்கள் போன்றோர் இந்த 16 அமைப்புகளின் மூலம் எந்த உதவியையும் பெறுவதை இந்தத் தடைச் சட்டமூலம் கண்காணிக்கும் எனத் தெரியவருகிறது.
Defense Ministry Photo
- See more at: http://www.canadamirror.com/canada/23991.html#sthash.7M363fAs.dpuf

Geen opmerkingen:

Een reactie posten