தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 2 april 2014

வாளோடு திரிந்தார் எழிலன்! அனந்தி பொய் கூறி வருகிறார்: யாழில் சுவரொட்டிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளரும் முக்கிய தளபதிகளில் ஒருவருமான எஸ். எழிலனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் இந்த துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படும் குற்றச்செயல்கள் குறித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழிலன் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை ஆட்சேர்ப்பிலேயே செலவிட்டார்.
யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர் குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் ஒருசில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிச்சயம் எழிலனது பெயரும் இருக்கும்.
சிறார்கள் பெண்கள், இளைஞர்ளை கட்டாயமாக படைக்கிணைத்து சனங்களை தப்பிச் செல்ல விடாமல் தடுத்தும் தப்பிச் செல்ல முற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை தயக்கமின்றி எழிலன் மீது சுமத்த முடியும்.
எழிலனின் குற்றங்களை ஒருவர் தான் நேரில் கண்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எழிலன் வாளோடு திரிந்தார். எனினும் அனந்தி பொய் கூறி வருகிறார் எனவும் சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சுவரொட்டியில் எழிலன் தொடர்புடைய பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் இந்த சுவரொட்டியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பத்தி எழுத்தாளர் ஒருவருடைய வலைப்பதிவில் இருந்து பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணத்தில் அதிகளவான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் ஒருவரது தகவல்களை கோரி யாழில் சில இடங்களில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டுப்பட்டுள்ளன.
தெய்வீகன் அல்லது பகீரதன் என்ற நபர் தொடர்பான தகவல் கோரி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.நல்லூர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளில் தேடப்படும் நபருடைய புகைப்படத்துடன் மேற்படி துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த நபர் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கமும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
அனந்தி சசிதரன் நல்லிணக்கத்தை சீர்குலைப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனந்தி சசிதரன் வெளியிட்ட சில அறிக்கைகள் மற்றும் தகவல்களும் ஒரு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ். எழிலனின் மனைவியான அனந்தி, கடந்த வாரம் முடிவடைந்த ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சார்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
போரின் போதும் போருக்கு பின்னரும் அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்திய அனந்தி சசிதரன், நாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட ஆதரவு வழங்குவதாகவும் கூறியிருந்தார்.
அனந்தி, சர்வதேச சமூகத்திற்கு தவறான தகவல்களை பரிமாறி வருவதாக குற்றம் சுமத்தியுள்ள அரசாங்கம், புலிகள் சம்பந்தமான விடயங்களை தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் மற்றும் போரின் போதும் போருக்கு பின்னர் காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அனந்தி சசிதரன் ஒரு வலுவான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.
2009 ஆம் ஆண்டு இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் தனது கணவரான எழிலன் காணாமல் போனதாக அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/23910.html#sthash.c7194zuQ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten