தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 april 2014

GTF , BTF, நாடுகடந்த அரசு உட்பட சுமார் 15 அமைப்புகளை தடைசெய்துள்ளார் மகிந்தர் !

ஒன்றுக்கும் உதவாத அமெரிக்க பிரேரணை, தமக்கு பலன் தரப்போவது இல்லை என அறிந்துகொண்ட தமிழர்கள், ஜெனீவாவில் நவிப்பிள்ளையின் அறிக்கையை முன்வைத்து சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். அத்தோடு ஐ.நாவின் சிறப்பு நீதிமன்றம் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் புலம்பெயர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத மகிந்தர், சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகளை தடைசெய்வதாக வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார். இதனை மகிந்தர் தனக்கு இருக்கும் சிறப்பு அதிகாரம் மூலம் சட்டமாக்கியும் இருக்கிறார். அதாவது புலம்பெயர் நாடுகளில் ஜனநாயக ரீதியில் இயங்கிவரும் இந்த தமிழ் அமைப்புகளை மகிந்தர் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுள்ளார். இதனை இவர் எவ்வாறு செய்யமுடியும் ?

இதில் தமிழ் மக்கள் ஒரு விடையத்தை நன்றாக கவனிக்கவேண்டும். கடந்த வருடமும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நாவில் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றியது. ஆனால் அப்போது தமிழர்கள் அமைதியாக இருந்தார்கள். மகிந்தர் அந்த வேளை இதுபோல அதிரடி நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. ஆனால் இம் முறை அமெரிக்க தீர்மானம் கடுமையாக இல்லை, எனவே தமிழர்கள் வேறு பாதை ஒன்றை தேர்ந்து எடுத்துள்ளார்கள்( அதாவது ஐ.நா சிறப்பு நீதிமன்றம், மற்றும் சர்வதேச விசாரணை) இதனைப் பார்ததும் தான் மகிந்தர் மிரண்டுவிட்டார். இதுதான் யதார்த்தம் ஆகும். ஏன் எனில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் நீர்த்துப்போனவை என்றும் அது தம்மை ஒன்றும் செய்யப்போவது இல்லை என்பதும் மகிந்தர் அன் கோவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தமிழர்கள் அதனை எதிர்த்து பிறிதொரு பொறிமுறையைக் கையாள ஆயத்தங்களைச் செய்யும்வேளை, மகிந்தரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச சுயாதீன விசாரணை, மற்றும் ஐ.நாவின் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது போன்றவற்றை முன்னெடுத்துச் செல்ல, புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளால் மட்டுமே முடியும். எனவே உடனடியாக அவற்றை பலவீனப்படுத்த மகிந்தர், நேரடியாக களமிறங்கியுள்ளார். இதில் நாம் ஒரு விடையத்தை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்த 15 அமைப்புகளும் இனி கூட்டங்கள் நடத்தும்போது, இலங்கையில் உள்ள எம்.பிக்கள் அல்லது மனித உரிமை செயல்பாட்டாளர்கள் எவரும் இதில் கலந்துகொள்ள முடியாது. அப்படி கலந்துகொண்டால், இலங்கையில் அவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். இதுவரை இனப்படுகொலை புரிந்துவந்த இலங்கை அரசு, தற்போது ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்துள்ளது.

பயங்கரவாத அமைப்புகளாக தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் விபரம்:

01. Liberation Tigers of Tamil Eelam a.k.a LTTE a.k.a Tamil Tigers.

02. Tamil Rehabilitation Organization a.k.a TRO.

03. Tamil Coordinating Committee a.k.a TCC

04. British Tamil Forum a.k.a BTF

05. World Tamil Movement a.k.a WTM

06. Canadian Tamil Congress a.k.a CTC

07. Australian Tamil Congress a.k.a ATC

08. Global Tamil Forum a.k.a GTF

09. National Council Of Canadian Tamils a.k.a NCCT a.k.a Makkal Avai

10. Tamil National Council a.k.a TNC

11.Tamil Youth Organization a.k.a TYO

12. World Tamil Coordinating Committee a.k.a WTCC.

13. Transnational Government Of Tamil Eelam a.k.a TGTE

14. Tamil Eelam Peoples Assembly a.k.a TEPA

15 .World Tamil Relief Fund a.k.a WTRF

16. Headquarters Group a.k.a HQ Group

According to authoritative sources the organizations listed as suspected terrorist entities functioning on foreign soil fall under four broad categories reportedly under the overall control of four key individuals.

They are the organization/s under-

1. Perinbanayagam Sivaparan alias “Nediyavan”;

2. Rev.Fr. SJ Emmanuel

3. Visuvanathan Ruthirakumaran

4. Sekarampillai Vinayakamoorthy alias Vinayagam


|  http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6619

Geen opmerkingen:

Een reactie posten