[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 05:23.21 AM GMT ]
மொரட்டுவ, மல்விலாவத்த என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் குறித்த இளைஞர்கள் கைது செய்யபப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை பொலிஸார் கடுமையாக துன்புறுத்தியுள்ளதாக இளைஞர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். ே
எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை முகத்தவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் 6 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWesy.html
இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 32 பேர் இந்தியாவில் உள்ளனர்! கைது செய்ய மும்முரம்!!
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 05:39.28 AM GMT ]
இலங்கையில் 30 ஆண்டுகளாக இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரானது 2009 ல் முடிவுற்றது.
வெளிநாட்டிலிருந்து செயல்படும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 தமிழ் அமைப்புகள் இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறி விடுதலை புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கும் இவற்றின் நிர்வாகிகள் 424 பேருக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்டோர் இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இவர்களில் 32 பேர் இருப்பதாகவும் இவர்களை கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய புலனாய்வுத் துறை தலைவர் கபில இதனைப் பற்றி கூறியபோது, " குளோபல் தமிழ் அமைப்பு, பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆகிய பெயர்களில் செயல்படும் விடுதலை புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசை அடிக்கடி சந்திக்கின்றனர்.
தென் ஆப்ரிக்க தலைவர் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குளோபல் தமிழ் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இது போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வெளிநாட்டு அரசுகளை கேட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyETbLWesz.html
இந்தியா, தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது: பொன்.செல்வராஜா பா.உ
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 05:44.11 AM GMT ]
வெல்லாவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட தும்பங்கேணி பிரதேச மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கும் மக்கள் சந்திப்பு நேற்று தும்பங்கேணியில் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் சோ.திருத்தணிகாசலம் தலமையில் நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, இரா.துரைரெட்னம், மா.நடராஜா, கி.வெள்ளிமலை, கோ.கருணாகரம் மற்றும் த.தே.கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை வேட்பாளர் குணசேகரம், த.தே.கூட்டமைப்பின முக்கியஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
அமெரிக்காவினால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனிவாவிலே கொண்டு வரப்பட்ட தீர்மானமானத்திற்கு இந்திய அரசாங்கம் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் ஆதரித்து வாக்களித்திருந்தது. ஆனால் இம்முறை அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய அரசாங்கம் நடுநிலமையாக இருந்து ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் ஏமாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாவில் பாகிஸ்த்தானினால் கொண் டுவரப்பட்ட மூன்று தீர்மானங்களுக்கு, இந்தியா - பாகிஸ்த்தானுடன் இணைந்து வாக்களித்திருந்ததோடு தீர்மானத்தினையும் எதிர்த்திருந்தது.
அந்த மூன்று தீர்மானங்களுள் முதலாவதாக அமைவது சர்வதேச விசாரணையை ஒத்திவைக்க வேண்டும், இரண்டாவது இத்தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த போதியளவு பணம் உங்களிடம் இருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்கள். மூன்றாவது 10வது சரத்தினை உடனடியாக நீக்கினால் அதற்கு ஆதரவு
வழங்கத் தயார் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
வழங்கத் தயார் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
இதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா பாகிஸ்த்தானுடன் இணைந்து வாக்களித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாரான துரோகத்தினை இந்தியா தமிழ்மக்களுக்கு செய்திருந்தாலும் இறுதியில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது அவர்களது கோரிக்கை தோல்வியிலேயே முடிந்தது. இதானல் இந்தியா இறுதி நேரத்தில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இருந்து விலகி நடுநிலமை வகித்தது.
இதற்கான காரணம் அவர்களினுடைய அரசியல் தந்திரோபாயம், மற்றும் அவர்களினுடைய நாட்டுப்பிரச்சனை என்பன காரணங்களாக அமையக்கூடும். ஆனால் இந்தியா தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தமிழ்மக்களின் நெஞ்சங்களை மறந்து செயற்பட்டதோடு இனிவரும் காலங்களிலும் தமிழ்மக்களுக்கான எந்தத்தீர்வையும் முன்வைக்காது என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.
சர்வுதேசத்தின் அழுத்தம் காரணமாகவும் சர்வதேசம் இலங்கை வாழ் தமிழ்மக்களிடத்தே கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை காரணமாகவும், பாகிஸ்த்தானின் கோரிக்கைகள் அந்த அரங்கிலே தோற்கடிக்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்தான் இந்த இந்தியா அரசாங்கம். பாகிஸ்த்தானின் கோரிக்கைக்கு துணைபோன இந்தியா நடுநிலமை வகித்திருக்க வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிமடுத்த இந்தியா, நடுநிலமை வகித்ததன் காரணம் என்ன என்று புரியாதவர்களாக இலங்கையிலே வாழ் தமிழர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றார்கள் என இந்தியா நினைக்கின்றது. அவ்வளவிற்கு இலங்கைத்தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதனை இந்தியா உணரவேண்டும்.
எது எப்படி இருப்பினும் தமிழர்களின் பிரச்சனையில் மேற்கத்திய நாடுகள் ஐரோப்பா ஆகிய நாடுகள் என்றும் எமக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை மட்டும் எம்மிடம் இருக்கின்றது. எமக்கான இறுதித்தீர்வு என்றோ ஒருநாள் கிடைத்தே தீரும். அது கிடைக்கும் வரைக்கும் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இலங்கை அரசாங்கத்தினால் இலங்கை வாழ் தமிழர்கள் அன்றும் இன்றும் இம்சிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதனை உலகறியச் செய்த தன்மானமுள்ள கட்சியாக இருப்பது எமது த.தே.கூட்டமைத் தவிர வேறெந்தக்கட்சியும் இல்லை என்பதனை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.
வட, கிழக்கு தமிழர்கள் என்றும் தமிழத் தேசியக் கூட்டமைப்பினை மறந்தவர்கள் அல்ல என்பதனை கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நிருபித்திருக்கின்றார்கள். அதே போன்று இனிவரும் காலங்களிலும் நிருபிப்பார்கள் என்ற அசையாத நம்பிக்கை எமக்குண்டு.
இலங்கை அரசாங்கத்திலே இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகள் எங்களுடைய கட்சியினைப் பற்றி பலவிதமான கருத்துக்களை முன் வைத்துக்கொண்டு வருகின்றார்கள். அரசாங்கத்தினை ஆதரிக்காத த.தே.ட்டமைப்பு அபிவிருத்தியைப்பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கின்றது என அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். ஜனநாயகம் தெரியாதவர்கள் ஜனநாயகத்தினை அறிந்த பின்னர் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்பதனை அவர்களைப் பார்த்து கேட்க விரும்புகின்றேன்.
இந்த நாட்டிலே மாறிமாறி வந்த அரசாங்கங்கள் தமிழ்மக்களை அன்றிருந்து இன்று வரைக்கும் ஏமாற்றிக்கொண்டுதான் வந்தார்களே தவிர எந்தவிதமான நல்லவிடயங்களையும் இதுவரைக்கும் தமிழ்மக்களுக்கு செய்யவில்லை என்பது மாத்திரம்தான் உண்மை
இந்த நாட்டிலே இதுவரைக்கும் அதிகாரப்பரவலாக்கல் நடைபெற்றிருந்தால் புரையோடிப்போயிருந்த யுத்தம் நடைபெற்றிருக்க முடியாது. அதுமாத்திரமல்ல இலட்சக்கணக்கான விலையுயர்ந்த உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும், உறவுகளை இழந்திருக்கமாட்டோம்.
அரசாங்கம் இந்த நாட்டிலே தமிழர்களையும் ஒரு தேசிய இனமாகக்கருதி அவர்களுக்கு கொடுக்க வேண்டியவற்றை கொடுத்திருந்தால் தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது.
தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் குடியேற்றங்களை அமைத்து கலப்பினை ஏற்படுத்த நினைக்கின்றார்கள் இதனை எதிர்த்தவர்கள் யார்? இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்தார்கள் அவர்களுக்கு தமிழ்மக்கள் எப்படிப்போனாலும் பாரவாய்யில்லை அவர்கள் மாத்திரம் சகல சுக போகங்களையும் அனுபவித்தால் போதும் என்றுதான் அவர்கள் அரசியல் செய்கின்றார்கள்.
இன்று இவர்கள் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி ஓடிவருகின்றார்கள் எதற்காக ஓடிவருகின்றார்கள் என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருத்தல் மிகமிக அவசியமானதொன்றாகும். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்கள் எல்லாம் வேற்று இனத்தவர்களைக் கொண்டு வந்து குடியேற்றி நிலங்களை அபகரிக்கின்றார்கள். இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் என்றால் எங்களை த்தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் இல்லை என்பது தான் உண்மை எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWes0.html
Geen opmerkingen:
Een reactie posten