தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன்!- எஸ்.பி.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்க முடியாது என பொலிஸார் கைவிரிப்பு!
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 05:02.19 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாக கைவிரித்தார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன.
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது,
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. குழுவினர் தனது வீட்டை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என்று அதன் உரிமையாளர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
மானிப்பாயில் உள்ளது அவரது வீடு அதனை ஈபிடிபியினர் வலுக்கட்டாயமாகத் தன்னிடம் இருந்து பறித்தெடுத்தார்கள் என்றும் அதற்கு வாடகை கூட அவர்களால் தரப்படவில்லை என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததன் காரணத்தாலேயே அவர் தேசிய பொலிஸ் சேவைகள் ஆணைக்குழுவை நாடி இருந்தார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த முறைப்பாடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்கொண்டுவரப்பட்டது. அது குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனவுக்கு ஆணைக்குழு பரிந்துரைத்திருந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதற்கான பதில் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அமைச்சர் டக்ளஸ்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று விமலசேன தெரிவித்திருக்கிறார்.
இந்த விடயம் தொடர்பில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும் பாதிக்கப்பட்ட நபரே அமைச்சரை நேரில் சென்று சந்தித்து பேச முடியும் என்றும் இல்லையேல் நீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWer6.html
போர்க்குற்ற கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது: தென்னிலங்கை பேராசிரியர்
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 02:22.25 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றக் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்ககூடாது என்று தென்னிலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பதன் மூலம் ஏற்கனவே அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல் அறிக்கைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதாக அமைந்து விடும் என்று தென்னிலங்கை பேராசிரியரான நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்க செய்தித்தாளுக்கு தகவல் அளித்துள்ள அவர், நவநீதம்பிள்ளை ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் அறிக்கை, கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதன் காரணமாக மாற்றம் பெறப்போவதில்லை என்று நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் கொள்கையை மேற்கு நாடுகளுக்கு விட்டுக்கொடுத்ததாக இந்த செயல் அமைந்து விடும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாகாணசபை தேர்தலின் முடிவுகளை கொண்டு மேற்கத்தைய நாடுகள் இலங்கை மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்துக் கொள்ளவேண்டும்.
இதேவேளை உள்ளூர் பொறிமுறையின் மூலம் பிரித்தானியா, நவநீதம்பிள்ளையின் யோசனையை குப்பை தொட்டியில் எறியும் நிலை ஏற்படவேண்டும்.
பிரித்தானியா காலணித்துவ காலத்திலும் தற்போதும் இலங்கையில் பிரச்சினையை உருவாக்க முனைவதாக நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWer4.html
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன்!- எஸ்.பி.
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 02:08.31 AM GMT ]
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் மொத்த சொத்து பெறுமதி 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அண்மையில் 16 வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்திருந்தது.
இந்த அரச சார்பற்ற நிறுவனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணம்,  கட்டடங்கள்,  வர்த்தக நிலையங்கள்,  வாகனங்கள் என பல்வேறு வழிகளில் சொத்துக்கள் காணப்டுகின்றன.
அரச சார்பற்ற நிறுவனங்களின் சொத்துக்களை நிறுவனத்தின் உறுப்பினர்களது குடும்ப உறுப்பினர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
போர் இடம்பெற்ற காலத்தில் மக்களுக்கு உதவிகளை வழங்கும் போர்வையில் பணம் திரட்டி, அரச சார்பற்ற நிறுவனங்கள் சொத்தக்களை பெருக்கிக் கொண்டுள்ளன என எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலிகள் அமைப்பை மீள இயங்கச் செய்ய இந்த அமைப்புக்கள் முயற்சிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWer3.html

Geen opmerkingen:

Een reactie posten