தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

வலி.வடக்கு விடுவிப்பிற்கு இடமில்லை! கைவிரித்தார் உதயபெரேரா! ஏமாற்றத்தில் மக்கள்

இலங்கையின் உலககிண்ண வெற்றியை பத்திரிகைத் தலைப்பாக மிரட்டும் படையினர்

இலங்கை உலக கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள நிலையினில் யாழ்ப்பாணத்தினில் படைமுகாம்கள் தோறும் வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்து படையினரது கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது.
உள்ளுர் பத்திரிகைகளினை தொடர்பு கொண்ட படை அதிகாரியெர்ருவர் நமது இலங்கை உலக கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளதாக நாளைய பதிப்பினில் தலைப்பு செய்திகளை அறிக்கையிட பணிப்புரை விடுத்திருப்பதாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நாளை நாடாளவிய ரீதியினில் இக்கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வடக்கு கொண்டாட்டங்களை படையினர் பொறுப்பேற்றுள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.Cricket-Win-SrilankaCricket-Win-Srilanka01Cricket-Win-Srilanka02Cricket-Win-Srilanka03Cricket-Win-Srilanka04Cricket-Win-Srilanka05Cricket-Win-Srilanka06Cricket-Win-Srilanka07Cricket-Win-Srilanka08Cricket-Win-Srilanka09
http://www.jvpnews.com/srilanka/64672.html

வலி.வடக்கு விடுவிப்பிற்கு இடமில்லை! கைவிரித்தார் உதயபெரேரா! ஏமாற்றத்தில் மக்கள்

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் மீள்குடியமர்வுக்கு அனுமதிப்பதென்பது சாத்தியமற்றதென யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேரா தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்றம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது பலாலி படைத்தலைமையகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.
உயர்பாதுகாப்பு வலய மீள்குடியமர்வு தொடர்பில் உதய பெரேராவிற்கு விநாயகமூர்த்தி கடிதமொன்றினை பெப்ரவரி அனுப்பி வைத்துள்ளார். அதை தொடர்ந்தே சந்திப்பொன்றிற்கு உதய பெரேரா அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினில் மீள்குடியமர்வுக்கு அனுமதிப்பதென்பது சாத்தியமற்றதென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேரா தம்மிடம் வெட்டொன்று துண்டிரண்டாக தெரிவித்ததாக தெரிவித்தார்.
எனினும் தையிட்டி மற்றும் மயிலிட்டிப்பகுதிகளையாவது மீள்குடியமர்விற்கு விடுவிக்க தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை நிராகரித்ததாக தெரிவித்த விநாயகமூர்த்தி தையிட்டி, மையிலிட்டி போன்ற பகுதிகளில் மீள்குடியேற்றம் என்பது இனிவரும் காலங்களிலும் சாத்தியப்படாது என்று கட்டளைத்தளபதி உறுதிபடக்கூறியதாகவும் தெரிவித்தார்.
பலாலி விமானநிலையம் விஸ்தரிப்பு இடம்பெறவுள்ளதுடன் பலாலி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது. எனவே பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் அத்துடன் விமானங்களை நிறுத்துவதற்கான இடமும் வேண்டும் எனவே மக்களை மீள்குடியேற்றம் செய்வது என்பது இனிமேல் ஒருபோதும் சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களை குடியேற்றுவதற்கு மாற்றீடாக குடியேற்ற கிராமங்களை படையினர் அமைக்கவுள்ளதாக உதயபெரேரா தெரிவித்ததாக கூறிய விநாயகமூர்த்தி அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியதாகவும் தெரிவித்தார்.
ஜெனீவா கூட்டத்தொடர் வரை இடம்பெயர்ந்த மக்கள் போராட்டங்கள் ஒன்றினையும் நடத்தாது நம்பிக்கையோடு இருக்க கேட்டுவந்த உதயபெரேரா தற்போது தனது உண்மை முகத்தை காட்ட தொடங்கியிருப்பதாக இடம்பெயர் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/64686.html

Geen opmerkingen:

Een reactie posten